ஏ. ஜே. முகமது அலி
அப்துல் ஜமீல் முகமது அலி (Abdul Jamil Mohammad Ali, 15 திசம்பர் 1951 – 2 மே 2024) வங்காளதேசத்தின் வழக்கறிஞராக இருந்தார். இவர் 2005 முதல் 2007 வரை வங்காளதேசத்தின் 12-ஆவது அரசுத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.[3][4]
ஏ. ஜே. முகமது அலி A. J. Mohammad Ali | |
---|---|
এ. জে. মোহাম্মদ আলী | |
2023-இல் அலி | |
12-ஆவது வங்காளதேச அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 30 ஏப்பிரல் 2005 – 24 சனவரி 2007 | |
நியமிப்பு | இலாசுதின் அகமது |
குடியரசுத் தலைவர் | இலாசுதின் அகமது |
முன்னையவர் | ஏ. எஃப். காசன் அரிஃப் |
பின்னவர் | பிஃடா எம். கமல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவகோன், கிழக்கு பாக்கித்தான்[1] | 15 திசம்பர் 1951
இறப்பு | 2 மே 2024 மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, சிங்கப்பூர் | (அகவை 72)
காரணம் of death | முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்[2] |
இளைப்பாறுமிடம் | பனானி கிரேவ்யார்டு |
தேசியம் | வங்காளதேசர் |
அரசியல் கட்சி | வங்காளதேச தேசியக் கட்சி |
பெற்றோர் |
|
தொழில் | வழக்குரைஞர் |
வாழ்க்கையும் தொழிலும்
தொகுஅலியின் தந்தை எம். எச். கண்டேகர் வங்காளதேசத்தின் முதல் அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்தார்.[5] 1980 இல் உயர்நீதிமன்றத்திலும், 1985 இல் மேல்முறையீட்டுப் பிரிவிலும் பயிற்சி பெற அலி சேர்க்கப்பட்டார்.[6] இவர் 2001 அக்டோபர் 23 அன்று கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், 2005 ஏப்ரல் 30 அன்று அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார்.[7] 2007 சனவரி 24 அன்று இவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.[5]
அலி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும், வங்காளதேச வழக்குரைஞர் கழக நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[8]
ஜியா அனாதை இல்ல அறக்கட்டளை ஊழல் வழக்கில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் காலிதா சியாவின் வழக்கறிஞராக அலி பணியாற்றினார்.[9][10] இவர் மௌடுத் அகமதின் வழக்கறிஞராகவும் இருந்தார்.[11]
இறப்பு
தொகுஏ. ஜே. முகமது அலி 2024 மே 2 அன்று தனது 73-ஆவது வயதில் காலமானார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ (in bn). 4 மே 2024. https://www.dailynayadiganta.com/law-and-justice/832540/.
- ↑ (in bn). 2 மே 2024. https://www.kalerkantho.com/online/national/2024/05/02/1384155.
- ↑ "SCBA | Members Directory". Bangladesh Supreme Court Bar Association. Archived from the original on மே 2, 2024. பார்க்கப்பட்ட நாள் மே 2, 2024.
- ↑ bdnews24.com. "Law officers happy as AJ Mohammad Ali appointed Attorney General". bdnews24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ 5.0 5.1 "Attorney General AJ Mohammad Ali quits"."Attorney General AJ Mohammad Ali quits".
- ↑ "Mohammad Ali new Attorney General".
- ↑ "Attorney general resigns".
- ↑ "Ill attempt at destroying rule of law".
- ↑ "Graft case: HC sets tomorrow to hear Khaleda’s pleas challenging trial court order". The Daily Star. April 19, 2017. http://www.thedailystar.net/politics/hc-sets-tomorrow-hear-khaledas-pleas-1211143. பார்த்த நாள்: June 9, 2017.
- ↑ "HC adjourns hearing on Khaleda's revision petition". The Daily Star. February 27, 2017. http://www.thedailystar.net/city/hc-adjourns-hearing-khaledas-revision-petition-1367995. பார்த்த நாள்: June 9, 2017.
- ↑ "HC keeps Moudud’s writ for house waiting". The Daily Star. June 8, 2017. http://www.thedailystar.net/city/moudud-ahmed-gulshan-residence-writ-petition-house-1417249. பார்த்த நாள்: June 9, 2017.
- ↑ "Jatiyatabadi Ainjibi Forum president AJ Mohammad Ali passes away - - observerbd.com". The Daily Observer. பார்க்கப்பட்ட நாள் 2024-05-02.