ஏ. நாகப்பச் செட்டியார்

(ஏ. நாகப்ப செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ. நாகப்பச் செட்டியார் (A. Nagappa Chettiar) ஓர் இந்திய தொழிலதிபராகவும், இந்திய தோல் தொழில் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார்[1][2]. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரியில் 1915 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் நாளில் நாகப்பச் செட்டியார் பிறந்தார். இவர் ஈடுபட்ட தோல் வியாபாரம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஒரு பெரிய வணிகக் குழுமமாக வளர்ந்தது[3]. வெளிநாட்டு தோல் ஏற்றுமதியில் ஈடுபட்ட இந்தியாவிலிருந்த இடைத்தரகர்களை நீக்குவதற்கு இவரது முயற்சிகள் பெரிதும் உதவின. பாதியாக இறுதி செய்யப்பட்ட தோல் பொருட்களை ஏற்றுமதி செய்வதை பிரதானமாக கருதியக் காலத்தில், முழுமையாக இறுதி செய்த தோல்பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற கருத்துமுறையில் நாகப்பச் செட்டியார் முன்னோடியாக விளங்கினார்[1].

ஏ.நாகப்பச் செட்டியார்
A. Nagappa Chettiar
பிறப்பு6 ஆகத்து 1915
மேலசிவபுரி, தமிழ்நாடு, இந்தியா
இறப்புமார்ச்சு 13, 1982(1982-03-13) (அகவை 66)
பணிதொழிலதிபர்
விருதுகள்பத்மசிறீ

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன் இவர் முன்நின்று ஏற்பாடு செய்த வருடாந்தர தோல் கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய தோல் பொருட்கள் கண்காட்சியாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் நாகப்பச் செட்டியார் இருந்தார்[3][4][5]. சமுதாயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டுகளை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசாங்கம் 1967 ஆம் ஆண்டு நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது[6]. 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் நாள் நாகப்பச் செட்டியார் இயற்கை எய்தினார்[3].

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Hindu". The Hindu. 25 January 2001. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
  2. "Industrial Economist". Industrial Economist. 10 March 2015. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
  3. 3.0 3.1 3.2 "Book Review". VM Khaleel ur Rehman. 2015. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
  4. "Government of India". Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
  5. "Law Resource". Law Resource. 2015. Archived from the original on மே 18, 2015. பார்க்கப்பட்ட நாள் May 9, 2015.
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நாகப்பச்_செட்டியார்&oldid=3546506" இலிருந்து மீள்விக்கப்பட்டது