ஏ1 திரவ வளர் ஊடகம்

ஏ1 குழம்பு (A1 broth) என்பது ஒரு திரவ வளர் ஊடகம் ஆகும். இது உணவு, சுத்திகரிக்கப்பட்ட நீர், குடாவில் உள்ள கடல்நீரில் மலத்தில் காணப்படும் கோலிபார்ம் பாக்டீரியாக்களைக் கண்டறிவதற்கு நுண்ணுயிரியலில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சாத்தியமான எண் (MPN) முறையைப் பயன்படுத்தி பாக்டீரியாவின் இருப்பு அறியப்படுகிறது. ஆண்ட்ரூசு மற்றும் பிரெசுனெல் உருவாக்கிய வேதிக் கலவையின் அடிப்படையில் இந்த ஊடகம் தயாரிக்கப்படுகிறது.[1] இது துர்காம் குழாயுடன் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் நேர்மறையான குழாய் வாயுவில் சிக்கிய குமிழியை வெளிப்படுத்தும்.

ஊடகக் கலவை (கிராம்/லிட்டர்)

தொகு
டிரிப்டோன் 20.0
லாக்டோசு 5.0
சோடியம் குளோரைடு 5.0
ட்ரைடன் எக்ஸ் -100 1.0
சாலிசின் 0.5

[2]

தயாரிக்கும் முறை

தொகு

தேவையான உலர் பொருட்களை ஒரு லிட்டர் குளிர்ந்த வடிகட்டிய நீரில் கரைக்கவும். சேர்க்கைப் பொருட்கள் முற்றிலும் கரையும் வரை மெதுவாகச் சூடாக்கவும். சோதனைக் குழாய்களில் 9 மில்லி ஊடகத்தினை எடுத்து, துர்காம் குழாயினை தலைகீழாக இடவும். அழுத்த அனற்கலம் ஒன்றினைப் பயன்படுத்து 121° செண்டிகிரேடு அளவில் 15 நிமிடங்களுக்கு ஊடகம் உள்ள சோதனிக்குழாயினைக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், உலர்ந்த ஊடகத்தின் பொருத்தமான செறிவுள்ள பல வலிமையில் ஊடக குழம்பு தயார் செய்யலாம். ஊடகக் குழம்பின் இறுதி காரகாடித் தன்மைச் சுடெண் 6.9 ± 0.1 ஆக இருக்கவேண்டும்.[3]

பரவலான பயன்பாடு

தொகு

இந்த சோதனையின் மாறுபாடுகள் உலகெங்கிலும் உள்ள குடிநீரின் தன்மையினை அறியப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சிலியில் உள்ள மாகுவே மானிட்டோபாவின் ஸ்ப்ளிட் ஏரியின் கிரீ சமூகம்[4] மற்றும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Transdifferentiation of Stem Cells – Page 1174245593 – Experimental Biology". Archived from the original on September 14, 2007.
  2. "17112 A1 Broth BioChemika, for microbiology". Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  3. "A1 Broth |Sisco Research Laboratories (SRL) (India)". www.srlchem.com.
  4. "Portable Water-testing Kit: International Development Research Centre". Archived from the original on December 4, 2007.
  5. Suan, Sim Tiow; Chuen, Ho Yueh; Sivaborvorn, Komol (September 9, 1988). "Southeast Asian experiences with the coliphage test". Toxicity Assessment 3 (5): 551–564. doi:10.1002/tox.2540030510. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/tox.2540030510. பார்த்த நாள்: 2020-09-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ1_திரவ_வளர்_ஊடகம்&oldid=3931698" இலிருந்து மீள்விக்கப்பட்டது