ஏ டி டீ ஆர் எச் - 1 (நெல்)
ஏ டி டீ ஆர் எச் 1 (ADTRH 1) என்பது; 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வீரிய கலப்பின நெல் வகையாகும். ஐ ஆர் 58025 ஏ (IR 58025 A) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 66 ஆர் (IR 66 R) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து கிடைக்கப்பெறும் நெல் வகையான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய மத்தியகால நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 7100 கிலோ (71 Q/ha) தானிய மகசூல் தரக்கூடிய இந்நெல் இரகம், தமிழகத்தில் அதிகளவில் வேளாண்மை செய்யப்படுகிறது.[1]
ஏ டி டீ ஆர் எச் - 1 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐஆர்-58025-ஏ x ஐஆர்-66-ஆர் |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
7100 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1999 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
பருவகாலம்
தொகுமத்தியகால நெல் வகைகளை பயிரிட ஏற்ற பருவமான ஆகத்து மாதம் தொடங்கும், சம்பா பட்டத்தில்[2] (பருவத்தில்) பயிரிடப்படும் ஏ டி டீ ஆர் எச் 1, ஒரு வீரியம் மிகுந்த கலப்பின நெல் இரகமாகும்.[3]
சிறப்பம்சங்கள்
தொகுநீண்டு வளரும் நடுத்தர குட்டைப்பயிரான இது, உயர் விளைச்சல் தரும் இரகமாகும். பால் போன்ற வெண்மையும், நறுமணம் கொண்ட இந்நெல்லின் அரிசி, நீண்ட சன்னமாக (மெல்லியதாக) காணப்படுகிறது.[4]
சான்றுகள்
தொகு- ↑ "Details of Rice Varieties : Page 9 - 406". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
- ↑ நெல் பட்டங்கள்- கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tamil Nadu Rice Research Institute- ADTRH 1 Rice hybrid - 1998 (IR 58025A / IR 66R)
- ↑ Paddy Varieties of Tamil Nadu - Ruling Varieties - Hybrids - ADTRH 1