ஐஎன்எஸ் துருவ்

ஐஎன்எஸ் துருவ் (INS Dhruv (A40), பெருங்கடல் ஆய்வுக் கப்பல் ஆகும். இதனை தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளுடன், இந்தியக் கடற்படையும் இணைந்து ரூபாய் 1500 கோடி செலவில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டு[2], 10 செப்டம்பர் 2021 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படையின் கிழக்கு மண்டலத்தில் இணைக்கப்பட்டது.[3][4]

ஐஎன்எஸ் துருவ் கப்பலின் வரைபடம்
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் துருவ்
இயக்குனர்: இந்தியக் கடற்படையுடன் இணைந்து தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
கட்டியோர்: இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
செலவு: ₹1,500 கோடி
துவக்கம்: 30 சூன் 2014
வாங்கியது: 31 அக்டோபர் 2020[1]
பணியமர்த்தம்: 10 செப்டம்பர் 2021
அடையாளம்: A 40
நிலை: பணியில் உள்ளது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:பெருங்கடல் கண்காணிப்பு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு கப்பல்
பெயர்வு:15,000 t (15,000 long tons; 17,000 short tons)
நீளம்:175 m (574 அடி)
வளை:22 m (72 அடி)
Draught:6 m (20 அடி)
உந்தல்:
  • 2 × டீசல் எஞ்ஜின், ஒவ்வொன்றும் 9,000 kW (12,000 hp) மின்சாரம் தயாரிக்கும்
  • 3 × துணை மின் உற்பத்தி இயந்திரம் 1,200 kW (1,600 hp) (ஒவ்வொன்றும்)
  • 15 MW சக்தி
விரைவு:21 கடல் மைல்
பணிக்குழு:300
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
  • X-Band AESA ரேடார்
  • S-Band AESA ரேடார்
  • காவும் வானூர்திகள்:
  • 1 × ஹெலிகாப்டர்
  • 10 ஆயிரம் டன் எடையும், 175 மீட்டர் நீளமும் கொண்ட ஐஎன்எஸ் துருவ் கப்பல், செயற்கைக்கோள்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்தியாவை உளவு பார்க்கும் வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் நவீன தொழில்நுட்பத்தை இக்கப்பல் கொண்டுள்ளது. இந்தியப் பகுதிகள் மீது பறக்கும் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் இந்திய நகரங்களை நோக்கி வரும் அனைத்து வகையான ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் கண்டறிந்து இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை செய்ய வல்லது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இவ்வகையான கப்பல்கள் அமெரிக்கா, ருசியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்நாடுகளின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது. ஆழ்கடல் ஆராய்ச்சி தொழில் நுட்பமும் இக்கப்பலில் உள்ளது. இதனால் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் எளிதில் கண்டறிந்து இந்திய இராணுவத்துக்கு தகவல் அனுப்ப முடியும்.[5]

    மேலும் எதிரி நாடுகளின் அணு ஏவுகணைகள் மிக நீண்ட தூரத்தில் வரும் போதே கண்காணித்து எச்சரிக்கை செய்யும். எதிரிகளின் நீர்மூழ்கிகளை கண்டுடிப்பதற்கான கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    மேற்கோள்கள்

    தொகு
    1. "Annual Report 2020-21" (PDF). Hindustan Shipyard Limited. 2021-12-27.
    2. "VC 11184 — Indian Navy's First Ocean Surveillance Ship". www.indrastra.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
    3. Gupta, Shishir (2021-09-03). "India's Ist N-missile tracking ship Dhruv to be launched on Sept 10". Hindustan Times.
    4. INS Dhruv to be commissioned on September 10 by NSA Doval: All you need to know about the N-missile tracking ship
    5. INS Dhruv: India gets its first nuclear missile tracking ship

    வெளி இணைப்புகள்

    தொகு
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_துருவ்&oldid=3498747" இலிருந்து மீள்விக்கப்பட்டது