ஐ.எசு.ஓ 639-1
(ஐஎஸ்ஓ 639-1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.
எடுத்துக்காட்டாக:
- தமிழ் -- ta
- ஜப்பானிய மொழி -- ja
- ஆங்கிலம் -- en
ஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை.
2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்:
ஐ.எசு.ஓ 639-1 | ஐஎஸ்ஓ 639-2 | பெயர் | மாற்ற திகதி | மாற்றம் | முன்னர் அடங்கியது |
io | ido | Ido | 2002-01-15 | சேர் | art |
wa | wln | வாலோன் மொழி | 2002-01-29 | சேர் | roa |
li | lim | இலிம்பூர்கு மொழி | 2002-08-02 | சேர் | gem |
ii | iii | நுவோசு மொழி | 2002-10-14 | சேர் | |
an | arg | Aragonese | 2002-12-23 | சேர் | roa |
ht | hat | ஐத்தி கிரியோல் மொழி | 2003-02-26 | சேர் | cpf |