ஐஓஎஸ் 6
ஐஓஎஸ் 6 எனப்படுவது அப்பிள் நிறுவனத்தின் தொடுதிரை கருவிகளுக்கான நகர்பேசி இயங்குதளத்தின் ஆறாம் பதிப்பாகும். இந்தப்பதிப்பு செப்டம்பர் 19, 2012 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. மூன்றாம் தலைமுறை ஐபொட் கருவிகள் மற்றும் முதலாம் தலைமுறை ஐபாட் கருவிகள் இந்த பதிப்பில் ஆதரிக்கப்படவில்லை. ஐபோன் 3ஜிஎஸ் இற்குப் பிந்திய கருவிகள் முதன்மையாக இந்த இயங்குதளத்தின் பதிப்பில் ஆதரிக்கப்பட்டது.[1][2][3]
செப்டம்பர் 12, 2012இல் அப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் அப்பிள் ஐபோன் 5 மற்றும் அதை ஆதரிக்கும் ஐஓஎஸ் 6 ஆகியன உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பீட்டாபதிப்பில் இருந்து இறுதிப் பயனர் பதிப்பிற்கு விரைவாக மாற்றம்பெற்ற ஐஓஎஸ் பதிப்பாகவும் இந்தப்பதிப்பே திகிழ்கின்றது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
செயற்பாடுகள்
தொகுஅப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் இடையிலான கசப்பான நிக்ழவுகளைத் தொடர்ந்து கூகிள் யூடியூப் மற்றும் கூகிள் மப்ஸ் ஆகிய செயலிகள் இயல்பிருப்பாகவே நீக்கப்பட்டது. ஆயினும் அப்ஸ்டோரின் மூலம் தேவையான பயனர்கள் இதை பதிவிறக்கும் வசதி பின்னர் வழங்கப்பட்டது. அப்பிள் நிறுவனத்தின் மப்ஸ் சசெயலி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களை முப்பரிமான வடிவில் காணும் வசதிகளையும் வழங்கியது.
சிரி செயலி
தொகுஅப்பிளின் இலத்திரனியல் உதவியாளர் செயலி சிரியில் மேலதிக வசதிகள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களில் நேரடியாக செய்திகளை இயற்படுத்த முடிகின்றமை, மேலும் உணவகங்களில் முன்பதிவு செய்தல், வானிலை போன்ற தரவுகளைப் பெறும் வசதிகள் முதலியன வழங்கப்பட்டது. இது வரை ஐபோன் 4எஸ்இல் மட்டும் செயற்பட்ட சிரி செயலி இந்தப்பதிப்பின் பின்னர் ஐபோன் 5இலும் செயற்படத்தொடங்கியது.
பேஸ்புக் ஒருங்கிணைப்பு
தொகுபேஸ்புக் செயலி இயங்குதளத்துடன் உள்ளமைந்த ஒரங்கிணைக்கப்பட்ட இணைப்பைக் கொண்டிருந்தது. இதன் மூலம் பேஸ்புக் இயல் செயலியை நேரடியாக ஏனைய செயலிகளில் இருந்து அணுக முடிவதுடன் அப்ஸ்டோர் மற்றும் கேம் சென்டர் போன்ற செயலிகளில் லைக் பொத்தான்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வழுக்கள்
தொகுகூகிள் மப்ஸ் நீக்கப்பட்டு அப்பிள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மப்ஸ் செயலியில் பல பிழைகள் காணப்பட்டன. அப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி டிம் குக் அவர்களது உத்தியோகப் பூர்வ தளத்தில் மன்னிப்புக் கோருமளவிற்கு வழுக்கள் காணப்பட்டன.
ஐஓஎஸ் 6.1 பதிப்பின் பின்னர் மின்கலம் வேகமாக நிறைவு பெறுதல் மற்றும் நகர்பேசி சமிக்ஜை சரியாக கிடைக்காமை ஆகிய வழுக்களும் அறிவிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Souppouris, Aaron (September 10, 2013). "iOS 7 will come to iPhones and iPads on September 18th". The Verge. Vox Media. Archived from the original on August 27, 2017. பார்க்கப்பட்ட நாள் December 30, 2016.
- ↑ Geller, Jonathan S. (June 11, 2012). "iOS 6 announced for iPhone, iPad, iPod touch at WWDC 2012". Boy Genius Report. Penske Media Corporation. Archived from the original on December 30, 2016. பார்க்கப்பட்ட நாள் December 30, 2016.
- ↑ Tam, Donna (September 12, 2012). "Apple's iOS 6 release date: Start your downloads on Sept. 19". CNET. CBS Interactive. Archived from the original on May 14, 2021. பார்க்கப்பட்ட நாள் December 30, 2016.
ஐஓஎஸ் இயங்குதளங்கள் | |
---|---|
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9 |