ஐபோன் ஓஎஸ் 1

ஐபோன் ஓஎஸ் 1 என்பது ஐஓஎஸ் இயங்குதள வரிசையில் முதலாவதாக வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். ஐஒஎஸ் 4 இற்குப் பிறகு இந்த இயங்குதளங்கள் ஐபோன் ஓஎஸ் என்பதில் இருந்து ஐஓஎஸ் என்று மாற்றப்பட்டதையும் இங்கே குறிப்பபிட வேண்டும். தொடுதிரை உடைய கருவிகளுக்கான ஆப்பிளின் இயங்குதளத்தின் முதலாவது பதிப்பு இதுவாகும். இது வெளியிடப்படும் போது ஆப்பிள் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளத்தின் ஒரு மாற்றியமைக்கப்பட்ட பதிப்பே இந்த இயங்குதளம் என ஆப்பிள் அறிவித்தது[1]. ஆயினும் மார்ச் 6, 2008இல் வெளியிடப்பட்ட ஐபோன் மென்பொருள் உருவாக்க கருவியின் பின்னர் இந்த இயங்குதளத்தை ஆப்பிள் ஐபோன் ஓஎஸ் என்று அழைத்தது. மேலும் ஐபோன் ஓஎஸ் 4 முதல் இந்த இயங்கு தளத்தை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் என்று அழைக்கத்தொடங்கியது.

உசாத்துணைகள் தொகு

  1. "அப்பிள் இணையத்தளம் ஆவணப்படுத்தப்பட்டது". அப்பிள் நிறுவனம். http://www.apple.com/iphone/. பார்த்த நாள்: 4 சனவரி 2014. 


ஐஓஎஸ் இயங்குதளங்கள்  
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோன்_ஓஎஸ்_1&oldid=3586421" இருந்து மீள்விக்கப்பட்டது