ஐஓஎஸ் 4 அப்பிள் நகர்பேசி இயங்குதளத்தின் நான்காம் பதிப்பாகும். இந்த இயங்குதளம் மூலம் ஐபோன் மற்றும் ஐபோட் டச் ஆகியவை இயக்கப்படுகின்றன. ஜூன் 21, 2010இல் வெளியிடப்பட்ட[1] இந்தப் பதிப்பின் பின்னர் இது வரை ஐபோன் ஓஎஸ் என்று அழைக்கப்பட்ட இயங்குதளம் ஐஓஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இந்த பதிப்பின் முக்கியமான ஒரு அம்சமாக ஐபோட் பயனர்கள் இந்த இயங்குதளத்திற்காக எந்தவிதக் கட்டணங்களையும் செலுத்தத்தேவையில்லை என்று அப்பிள் அறிவித்தது.

முதலாவது ஐபோன் மற்றும் இரண்டாம் தலைமுறை ஐபோட் டச் ஆகிய கருவிகளில் இந்த இயங்குதளம் இயங்கமாட்டாது என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும் இந்தப்பதிப்பின் மூலம் நவீன இயங்குதளங்களில் உள்ள ஒரு இயல்பான பல்வேறு செயற்பாடுகளை ஒரே நேரத்தில் செய்யும் செயலையும் இந்த இயங்குதளத்தின் மூலம் செய்துகொள்ள முடியும்.

மேற்கோள்கள் தொகு

  1. "iOS 5 available now, makes the iPhone 4 feel completely new". venturebeat.com/. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)


ஐஓஎஸ் இயங்குதளங்கள்  
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓஎஸ்_4&oldid=3479839" இலிருந்து மீள்விக்கப்பட்டது