ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்
ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் ஐக்கிய நாடுகளின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது ஐக்கிய நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், அரசுகளின் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பாகும். பத்தாண்டுகளுக்கும் மேலதிகமாக சமாதான முன்னெடுப்பு, அநர்த்த முகாமைத்துவம் மற்றும் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல பில்லியன் டாலர்களுக்கு மேலாக ஓராண்டிற்குச் செலவிடும் இவ்வமைப்பானது ஓர் பொறியியல், கண்ணிவெடி நடவடிக்கை, சூழல் மீளமைப்பு, மீள்புனருத்தாரணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வமைப்பானது ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.
வெளியிணைப்புக்கள்
தொகு- திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் பரணிடப்பட்டது 2006-02-13 at the வந்தவழி இயந்திரம் - அதிகாரப்பூர்வத் தளம் (ஆங்கில மொழியில்)