ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இடைக்காலப் படைகள் (லெபனான்)
லெபனானில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இடைக்காலப் படைகள் (United Nations Interim Force in Lebanon), லெபனான்-இஸ்ரேல் எல்லைப்புறத்தில் தெற்கு லெபனானில் உள்ள நகோரா நகரத்தில், 19 மார்ச் 1978 முதல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இடைக்கால அமைதி காக்கும் படைகளின் தலைமையகம் செயல்படுகிறது. இதன் நோக்கம் ஹிஸ்புல்லா இராணுவமயமாக்கலை நிறுத்த உறுதிப்படுத்தவும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆயுதக் கடத்தலுக்கு எதிராக,லெபனான் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், லெபனான் அரசாங்கம் இப்பகுதியில் அதன் அதிகாரத்தை மீட்டெடுப்பதே ஆகும்.[1] ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் தீர்மானங்கள் 425 மற்றும் 426 மூலம் 19 மார்ச் 1978 இல் நிறுவப்பட்ட ஐ.நா. அமைதி காக்கும் பணியாகும். லெபனான் அரசாங்கம் அப்பகுதியில் தனது அதிகாரத்தை மீட்டெடுக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த அமைதிப்படை 1978ல் தெற்கு லெபனானில் பாலஸ்தீனிய கிளர்ச்சி மற்றும் லெபனான் உள்நாட்டுப் போரின் பின்னணியில் வந்தது.1982ல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பு மற்றும் 2000ல் லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறியதன் காரணமாக அப்பகுதியில் இராணுவ வெற்றிடத்தை சரிசெய்ய வேண்டியிருந்தது.
2018 வரை தெற்கு லெபனானில் UNIFIL படைகள் | |
சுருக்கப்பெயர் | UNIFIL |
---|---|
உருவாக்கம் | 19 மார்ச்சு 1978 |
வகை | ஐ. நா அமைதி காக்கும் படை |
சட்டப்படி நிலை | செயலில் |
தலைமையகம் | நகோரா, தெற்கு லெபனான் |
தலைமை | தலைமைப் படைத்தலைவர் மேஜர் ஜெனரல் |
மேல் அமைப்பு | ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை |
இணையதளம் | unifil.unmissions.org |
தெற்கு லெபனானில் உள்ள ஐ. நா அமைதிப் படையில் 46 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் உள்ளனர். [2] தெற்கு லெபனானை "அங்கீகரிக்கப்படாத ஆயுதம் ஏந்தியவர்களிடமிருந்து (ஹிஸ்புல்லா) பாதுகாக்கப்படுவதற்கு உதவும் பணியைக் கொண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Extracts relating to Article 98 of the Charter of the United Nations: Supplement No 5 (1970–1978)" (PDF). Repertory of Practice of United Nations Organs. United Nations. pp. §275–279. Archived from the original (PDF) on 19 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2006.
- ↑ UNIFIL Fact sheet
- ↑ United Nations Interim Force In Lebanon (UNIFIL)
அடிக்குறிப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Bregman, Ahron (2002). Israel's Wars: A History Since 1947. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-28716-6
- Bruns, Sebastian (2012). UNIFIL's Maritime Task Force and Germany's Contribution, in: Auftrag Auslandseinsatz. Neueste Militärgeschichte an der Schnittstelle von Geschichtswissenschaft, Politik, Öffentlichkeit und Streitkräften. Im Auftrag des Militärgeschichtlichen Forschungsamtes herausgegeben von Bernhard Chiari, Freiburg i.Br., Berlin, Wien: Rombach, 480 S. (= Neueste Militärgeschichte. Analysen und Studien, 1), 48 Euro, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783-7930-9694-8.
- Mattelaer, Alexander (2009). "Europe Rediscovers Peacekeeping? Political and Military Logics in the 2006 UNIFIL Enhancement" (PDF). Archived from the original (PDF) on 6 July 2011. (385 KB), Egmont Paper 34 Egmont-Koninklijk Instituut voor Internationale Betrekkingen