ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009
ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் 2009, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் (COP 15) கியோட்டோ நெறிமுறையின் ஐந்தாம் கூட்ட அங்கத்தவர்களையும் (COP/MOP 5) உள்ளடக்கியது. பாலி வழிநடப்பின்படி, 2012க்குப் பின்னரான பருவநிலை மாற்ற குறைப்பு குறித்த கட்டமைப்பு பற்றி உடன்பாடு காணவேண்டும்.[1]
ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு | |
---|---|
தகவல் | |
நாள்: | "டிசம்பர் 7–18, 2009 |
நிகழ்விடம்: | பெல்லா மையம், கோபனாவன், டென்மார்க் |
பங்கேற்பு: | ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டம் அங்கத்துவ நாடுகள் |
ஐநா பதிப்பு: | Special Climate Change Issue. |
இந்த மாநாட்டிற்கு முன்னோடியாக மார்ச் 2009இல் அறிவியல் மாநாடுகள் இதே பெல்லா மையத்தில் நிகழ்வுற்றன.
இந்த மாநாட்டின்போது "மிட்டில்பரோ போன்ற நகரம் இதே கால அளவில் வெளியிடும் 41,000 டன் அளவு கரியமில வளியினை வெளியிடும்" என எதிர்பார்க்கப்படுகிறது.[2]
தொடர்புடைய பொதுச் செயல்கள்
தொகுஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
தொகுஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் சூலை 3-4,2008இல் செர்மனியின் மக்டெபர்க்கில் நடந்த தனது ஐந்தாவது மக்டெபர்க் சுற்றுச்சூழல் அரங்கத்தில் மின்னுந்துகள் பயன்படுத்தும் வகையான கட்டமைப்பை ஏற்படுத்த அழைத்திருந்தது. இம்மாநாட்டில் தொழில்,அறிவியல்,அரசியல் மற்றும் அரசமைப்பில் இல்லா நிறுவனங்கள் ஆகியவற்றின் பெரும் தலைவர்கள் 250 பேர்கள் பங்கேற்று "தொடர்ந்த போக்குவரத்து-ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009|2012க்குப் பின்னரான CO2 திட்டம்" என்ற தலைப்பின் கீழ் செயல்திட்டங்களை விவாதித்தனர்.[3]
மற்றவை
தொகுடேனிஷ் அரசும் முதன்மை தொழிலகங்களும் இணைந்து கிளீன்டெக் என்னும் தீர்வுகளை வளர்த்தெடுக்கின்றன.இந்த இணைப்பு,டென்மார்க் பருவநிலை கூட்டரங்கம் என்ற பெயரில் அலுவல்முறை செயல்களுக்கு COP15 முன்னரும்,நடப்பிலும் பின்னரும் பொறுப்பேற்கிறது.[4]
தவிர பருவநிலை மாற்றங்களை எதிர்த்திடும் உள்ளாட்சி செயல்களுக்கான ஐரோப்பிய மாநாடும் உள்ளது.[5][6] செப்டம்பர் 25 அன்றைக்கான முழுநேரமும் ஐரோப்பிய மாநகர தந்தைகள் விவாதிக்க விடப்பட்டது.[7]
உள்ளாட்சி அரசுகள் பருவநிலை அரங்கம் COP 15 கட்டிடத்தின் ஓர் பகுதியில் அமைந்து மாநாட்டு விவாதங்களின் போது பரிந்துரைகளை வழங்கும்.[8]
ஐரோப்பிய ஒன்றியத்தின் பேரநிலை
தொகுசனவரி 28, 2009 அன்று ஐரோப்பிய ஆணையம் தன்னிலை விளக்கமாக, "கோபனாவன் மாநாட்டில் முழுமையான பருவநிலை உடன்பாடு" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.[9] இந்த அறிக்கையில் "மூன்று முக்கிய சவால்கள்: அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்கள் மற்றும் இலக்குகள்;குறைந்த கரிமம் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான செலவிற்கு நிதி தேடல் மற்றும் உலகளாவிய கரிம சந்தை கட்டுமானம்" குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.[10]
அலுவல்முறை கோபனாவனுக்கு முந்தைய பேர விவாதங்கள்
தொகுகோபனாவனில் விவாதங்களுக்குப் பின்னதான அறிக்கையின் வரைவுரை ஒன்று[11][12] பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.இது பல கட்டங்களில் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
பான்- இரண்டாம் பேர கூட்டம்
தொகு2009, சூன் 1 முதல் 12ஆம் நாள்வரை 183 நாடுகள் செர்மனியின் பான் நகரில் கூடி முக்கிய பேர கருத்துக்களை விவாதித்தனர். இவையே திசம்பரில் நடைபெறும் மாநாட்டு விவாதங்களுக்கு அடிப்படையாக அமையும். குயூடோ நெறிமுறை கீழான அதற்கமை செயற்குழு(AWG-KP)வின் விவாதங்களின் இறுதியில் அறிவியலாளர்கள் உலகின் அழிவைத் தடுக்க வேண்டுகின்ற வெளியீடு குறைப்புகளுக்கு(2020 ஆண்டுக்கு முன்னர் 1990 அளவுகளிலிருந்து 20% முதல் 40% வரையான குறைப்பு) அருகாமையில் வர இயலாது தடுமாறினார்கள். வளர்ந்த நாடுகளுக்கான குறைப்பு மற்றும் ஒவ்வொரு நாட்டிற்கான குறைப்பு இலக்கு இன்னும் முடிவாகவில்லை.ஆனால் பிரச்சினையின் பல கவலைகளை வகைப்படுத்துவதிலும் அதனை வரைவுரையில் சேர்ப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.[13]
ஏழாம் அமர்வு
தொகுபாங்காக்
தொகுதொலைநோக்கு கூட்டுறவு செயல் கீழான அதற்கமை செயற்குழு(AWG-LCA)வின் ஏழாம் அமர்வு செப்டம்பர் 28,2009 அன்று தாய்லாந்து பேங்காக் நகரில் நடந்தது.[14]
பார்சலோனா
தொகுசென்ற கூட்டத்தின் மீளமர்வு எசுப்பானியாவின் பார்செலோனா நகரில் நவம்பர் 2 முதல் 6 வரை நடந்தது. The resumed session was held in Barcelona, Spain, from the 2nd to the 6th of November in 2009. தொலைநோக்கு கூட்டுறவு செயல் கீழான அதற்கமை செயற்குழு கோபனாவன் மாநாட்டின்போது தனது எட்டாவது அமர்வை அங்கேயே வைத்துக் கொண்டு தன் பணியை முடிக்கும்.
உடன்பாடுகள் - நாடுவாரியாக
தொகுயப்பான்
தொகுதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 25% குறைப்பு.[15]
அமெரிக்க ஐக்கிய நாடு
தொகுதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 2005 நிலைகளிலிருந்து 17% குறைப்பு.2030இல் 42% மற்றும் 2050இல் 83% .[16]
ஐரோப்பிய ஒன்றியம்
தொகுதங்கள் கரியமில வளி வெளியேற்றத்தை 1990 நிலைகளிலிருந்து 2020ஆண்டுக்குள் 20% குறைப்பு .[17]
பிரேசில்
தொகு2005 நிலைகளிலிருந்து 38% குறைப்பு.
சீனா
தொகு2020 ஆண்டுக்குள் 2005 நிலையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CO2 பங்கினை 40-45% குறைப்பு.[18]
இந்தியா
தொகு2020 ஆண்டுக்குள்வெளியீடு தாக்கத்தை 2005 நிலையிலிருந்து 20%-25% குறைப்பு.[19]
விமரிசனங்கள்
தொகுகோபனாவன் வரைவு உடன்பாட்டிற்கு அக்டோபர் 2009இல் பல விமரிசனங்கள் எழுந்துள்ளன.கிறிஸ்டபர் மாங்க்டன் என்னும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த வரைவின்படி "ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் நிதி,பொருளாதாரம்,வரிவிதிப்பு,சூழலியல் குறித்து ஒப்பமிடும் அனைத்து நாடுகள் மீதும் முழு ஆதிக்கமுடைய ஓர் உலக அரசு ஏற்படுத்தப்பட உள்ளது,பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுக்கு கடனுதவி செய்ய கட்டாயப்படுத்தலும் தமது ஆளுமையை இழத்தலும் நிகழும்" என எச்சரித்துள்ளார்.He warned that wealthy nations may be obliged under the treaty to pay an "adaptation debt" to developing nations and to surrender their sovereignty.[20]
ஆஸ்திரேலியாவின் பழமை தாளியலாளர்கள் இந்த உடன்படிக்கை விவரங்களை பொதுமக்களுக்கு அரசு அளிக்கவில்லை என குறை கூறியுள்ளனர்[21][22]
இந்தியாவின் எதிர்கட்சிகள் பேரவிவாதங்களுக்கு முன்னரே இந்தியா தனது குறைப்பு இலக்கினை தெரியப் படுத்துவது அமெரிக்க ஐக்கிய நாட்டின் மற்றும் பிற வளர்ந்த நாடுகளின் அழுத்தத்தாலேயே எனவும் குறைப்பிற்கு தொழில்நுட்ப மாற்றமும் அறிவுசார் சொத்துரிமை பரவலும் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் விமரிசித்துள்ளனர்.[23]
குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கரிம பற்றுகளுக்குப் பதிலாக பசுமை பற்றுகளை பரிந்துரைத்துள்ளார்.கரிம பற்றுகள் திட்டத்தில் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கரிமத்திற்கு இணையாக கரிமம் சேமிக்கப்படும் திட்டங்களிலிருந்து பற்று வாங்கிக்கொள்வதாகும். அதாவது மாசுபடுத்தியபின் அதற்கான விலையைக் கொடுப்பதற்கு இணையானதாகும். பசுமை பற்று மாசுபடுத்துவோர் முதலில் பசுமை வழிகளை பின்பற்றி பற்றுகள் வரவு வைத்துக்கொண்டு பின்னர் மாசுள்ள தயாரிப்பை துவங்குவதாகும்.இந்த பரிந்துரையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள மைய அரசு அதனை பிற நாடுகளின் ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.[24]
மேற்கோள்கள்
தொகு- ↑ "IISD Reporting Services - Upcoming meetings". Archived from the original on 2009-12-12. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-13. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-28. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ http://www.eumayors.eu
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ Questions and Answers on the Communication Towards a comprehensive climate change agreement in Copenhagen
- ↑ "Towards a comprehensive climate agreement in Copenhagen" (PDF). Archived from the original (PDF) on 2009-12-29. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ "Negotiating text" (PDF) (in English (others available)). United Nations Framework Convention on Climate Change. p. 53. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Negotiating text" (PDF) (in English (others available)). United Nations Framework Convention on Climate Change. p. 181. பார்க்கப்பட்ட நாள் 2009-09-15.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Progress Made in Negotiations for Ambitious and Effective Copenhagen Deal at Bonn UNFCCC Meeting" (PDF). Press Release. UNFCCC/CCNUCC. 12 June 2009. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.
- ↑ http://unfccc.int/meetings/intersessional/bangkok_09/items/4967.php
- ↑ BBC (2009-09-07), Japan vows big climate change cut, பிபிசி
- ↑ BBC (2009-11-25), Obama vows greenhouse gas emissions cuts, பிபிசி
- ↑ BBC (2009-11-26), EU climate package explained, பிபிசி
- ↑ BBC (2009-11-28), Where countries stand on Copenhagen, பிபிசி
- ↑ The Hindu (2009-12-04), Jairam Ramesh: 20-25 % carbon emission intensity cut by 2020, தி இந்து, archived from the original on 2009-12-07, பார்க்கப்பட்ட நாள் 2009-12-07
- ↑ JANET ALBRECHTSEN (2009-10-28), Has Anyone Read the Copenhagen Agreement?, The Wall Street Journal
- ↑ Andrew Bolt (2009-11-04), Will Rudd pay the UN $7 billion?, Herald Sun, archived from the original on 2009-11-27, பார்க்கப்பட்ட நாள் 2009-12-07
- ↑ Janet Albrechtsen (2009-10-28), Beware the UN’s Copenhagen plot, The Australian, archived from the original on 2009-11-12, பார்க்கப்பட்ட நாள் 2009-12-07
- ↑ அரசு அழுத்தத்திற்கு பலியாகக் கூடாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- ↑ குசராத்தின் பசுமை பற்றுகள்
இதனையும் பார்க்க
தொகுபுற இணைப்புகள்
தொகு- COP15[தொடர்பிழந்த இணைப்பு] அலுவல்முறை வலைத்தளம்
- செய்தி தளங்கள்
- கோபனாவனில் இந்தியா
- கோபனாவன் மாநாடு 2009 பிபிசி செய்திகள்
- அரசு தளங்கள்
- ஐரோப்பிய ஒன்றிய தீர்வுகள் பரணிடப்பட்டது 2009-12-13 at the வந்தவழி இயந்திரம்
- COP15 பரணிடப்பட்டது 2009-12-09 at the வந்தவழி இயந்திரம் அமெரிக்காவின் நிலை
- Copenhaguen 2009: UN Chronicle Special Edition