ஐங்குறுநூறு பழையவுரை
ஐங்குறுநூறு அகத்திணைப் பாடல்களுக்கு ஒவ்வொன்றின் இறுதியிலும் அதன் நிகழ்விடம் காட்டும் விளக்கக் குறிப்பு உள்ளது
இதனைக் கருத்துரை எனக் குறிப்பிடுகின்றனர்.[1]
இதனைச் செய்தவர் இன்னார் எனத் தெரியவில்லை.
இதனை விடுத்துப் ‘பழைய உரை’ என்னும் குறிப்போடு சாமிநாதையர் பதிப்பித்துள்ள உரையையே இங்கு நாம் ‘பழைய உரை’ என எடுத்துக்கொள்கிறோம்.
இந்த உரையின் பாங்கு
- சில பாடல்களுக்கு ஓரிரு வரிக் குறிப்பு. சிலவற்றிற்கு பல வரிகளில் குறிப்பு. இப்படி அமைந்துள்ளது.
- சில பாடல்களுக்கு உள்ளுறை பற்றிய விளக்கங்கள் மட்டும் உள்ளன.
- ”பூவுப் புலாலும் ஒக்க விளையும் ஊரன் என்றது குலமகளிரைப் போலப் பொதுமகளிரையும் கொண்டொழுகுவான் என்றது”
- சில பாடல்கள் எவ்வாறு திணைக்குப் பொருந்தும் எனக் காட்டப்பட்டுள்ளன.
- இது கருப்பொருளால் பாலை
- இது காலத்தால் பாலை
- இது பாலைக்கு உரித்தாகிய வேனிற்கண் நிகழும் குரவும் குயிலும் கூவுதலால் பாலை ஆயிற்று
- இது பாலைக்கு உரிய கோங்கு கூறினமையால் பாலை ஆயிற்று
- சிலவற்றிற்கு வேறு பாடங்கள் காட்டப்பட்டுள்ளன.
- ஆங்காங்கே தொல்காப்பிய மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.
இந்த உரை எல்லாப் பாடல்களுக்கும் கிடைக்கவில்லை.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005