ஐசக் பி. கிளெய்மன்

உக்ரேனிய நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்

ஐசக் பென்சியோனோவிச் கிளெய்மன் (Isaac Bentsionovich Kleiman, உருசியம்: Исаак Бенционович Клейман, 11 சனவரி 1921 – 13 பெப்ரவரி 2012), உக்ரைனிய சோவியத் தொல்பொருள் நிபுணர் ஆவார்.

ஐசக் கிளெய்மன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் லெனின்கிராட் பீரங்கிப் பள்ளியில் 1939 முதல் 1941 வரை படித்தார். பெரும் தேசபக்திப் போரில் பங்காற்றினார். பிறகு, ஒடெசா_பல்கலைக்கழகத்தின் வரலாற்று பீடத்தில் 1952 இல் பட்டம் பெற்றார்.

பழங்காலத் தொல்லியல், குறிப்பாக வடக்கு கருங்கடல் மேற்குப் பகுதியில், டெனிசுடர் வாயில் உள்ள பண்டைய நகரமான டைராசு இவரது ஆர்வமுள்ள துறையாகும். சுமார் 100 அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டார்.

1963 முதல் 1988 வரை பண்டைய மற்றும் இடைக்கால டிரா பெல்கோரோட் அகழ்வாராய்ச்சிக்கான தொல்பொருள் ஆய்வின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றினார். வடமேற்குக் கருங்கடல் பகுதியில் மற்ற தொல்பொருள் ஆய்வுகளிலும் பங்கேற்றார்.

இவர் ஒடேசா தொல்பொருள் அருங்காட்சியகத்தில், உக்ரைனின் தேசிய அறிவியல் அகாதமியில் பணியாற்றினார். பல ஆண்டுகளாக பண்டைய தொல்பொருள் அருங்காட்சியகத் துறையின் தலைவராக இருந்தார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_பி._கிளெய்மன்&oldid=3858887" இலிருந்து மீள்விக்கப்பட்டது