ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு
ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு (Isoxazole) என்பது C3H7NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-புரோப்பைல் நைட்ரைட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஆல்கைல் நைட்ரைட்டு சேர்மமான இதை ஐசோபுரோப்பனால் சேர்மத்திலிருந்து தயாரிக்கலாம். தெளிவான வெளிர் மஞ்சள் நிறத்தில் எண்ணெயாக இது காணப்படுகிறது. [1]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-புரோப்பைல் நைட்ரைட்டு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 541-42-4 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 10929 |
ChemSpider | 10466 |
UNII | 2T3Y2PS0ZE |
ஒத்தசொல்s | ஐசோபுரோப்பைல் ஆல்ககால் நைட்ரைட்டு; நைட்ரசு அமிலம், ஐசோபுரோப்பைல் எசுத்தர்; 1-மெத்திலெத்தில் நைட்ரைட்டு; 2-புரோப்பைல் நைட்ரைட்டு |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C3 |
மூலக்கூற்று நிறை | 89.09 |
SMILES | eMolecules & PubChem |
இயற்பியல் தரவு | |
அடர்த்தி | 0.8684 g/cm? |
கொதி நிலை | 40 °C (104 °F) |
பயன்கள்
தொகுஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு என்பது போப்பர்கள் எனப்படும் உள்ளிழுக்கும் மருந்துகளாகப் பயன்படுத்தப்படும் சேர்மங்களில் ஒன்றாகும். ஓர் உற்சாகத்தைத் தூண்டும் ஒரு உள்ளிழுக்கும் மருந்தாக ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு கருதப்படுகிறது. பெரும்பாலும் ஐசோபியூட்டைல் நைட்ரைட்டுக்கு மாற்றாகவும் கருதப்படுகிறது.
பாதுகாப்பு
தொகுவிழித்திரையின் மையப்பகுதி பாதிப்புடன் ஐசோபிரைல் நைட்ரைட்டு தொடர்புடையது ஆகும். விழித்திரை மையத்தில் பார்வைக் குறைபாடு, மஞ்சள் புள்ளிகள் மற்றும் உள் பிரிவு மற்றும் வெளிப்புற பிரிவு சந்திப்பில் சீர்குலைவு போன்ற குறைபாடுகள் இதனால் உருவாகலாம். [2] இக்குறைபாடுகள் மீளக்கூடியதாகவும் இருக்கலாம். [3] பொதுவாக ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வேதிப்பொருளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Chemistry and Physics, CRC Press, 85th edition
- ↑ "Adverse ophthalmic reaction in poppers users: case series of 'poppers maculopathy'". Eye 26 (11): 1479–86. November 2012. doi:10.1038/eye.2012.191. பப்மெட்:23079752.
- ↑ Inserm. "Des pertes visuelles chez les consommateurs de poppers". www.inserm.fr (in பிரெஞ்சு). Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.