ஐடிஎசு பல் மருத்துவமனை

ஐடிஎசு பல் மருத்துவமனை (ITS Dental Hospital) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைந்துள்ள இந்திய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இது 1996-ல் மருத்துவர் ஆர். பி. சாதாவால் நிறுவப்பட்ட ஐடிஎசு கல்விக் குழுமத்தின் மருத்துவமனையாகும்.[1]

ஐடிஎசு பல் மருத்துவமனை

வரலாறு

தொகு

ஐடிஎசு பல் மருத்துவமனை நொய்டா மாநகரில் 2006-ல் துர்கா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது 1996-ல் மருத்துவர் ஆர். பி. சதாவால் நிறுவப்பட்ட ஐடிஎசு குழுவின் ஒரு பகுதியாகும். பல் மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் மருந்தியல் கல்வி ஆகிய துறைகளில் கல்லூரிகளை இந்த குழுமம் நிறுவியுள்ளது. ஐடிஎசு பல் மருத்துவமனையின் கிளை காஜியாபாத்தின் முராத் நகரில் உள்ளது.[2]

விருதுகள்

தொகு
  • கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக 2018-ல் 4097 பேர் கலந்துகொண்ட வாயினை சுத்தப்படுத்த வாய்த் தூய்மிப்பி பயன்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.[3]

சமூக முயற்சிகள்

தொகு

ஐடிஎசு பல் மருத்துவமனை "பசுமை" முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய கவனம் கரியமில தடம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மாற்று ஆற்றல் வள பயன்பாட்டினைக் குறைப்பதில் உள்ளது.[4] 2020ஆம் ஆண்டில், மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 250 படுக்கைகளை வழங்கினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "I.T.S Dental Hospital". docprime.com.
  2. "I.T.S Dental Hospital, Multi-Speciality Hospital in Murad Nagar, Ghaziabad - Book Appointment Online, View Reviews, Contact Number | Practo". practo.com.
  3. "Most people using mouthwash (multiple venues)". Guinness World Records.
  4. "आई टी एस एजुकेशन ग्रुप द्वारा कोरोना से लडने के लिए पीएम व सीएम राहत कोष मे 11 लाख रुपये की सहायता राशि दी". tennews.in. 7 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடிஎசு_பல்_மருத்துவமனை&oldid=3779536" இலிருந்து மீள்விக்கப்பட்டது