ஐதரசன் நிறமாலை வரிசை
இலத்திரன் ஏதாவது ஒரு உயரிய ஆற்றல் மட்டத்திலிருந்து சிறிய ஆற்றல் மட்டத்திற்கு குதிக்கும் போது அவ்விரு ஆற்றல் மட்டங்களின் ஆற்றல் வித்தியாசம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலையாக வெளிப்படும். இது அனைத்து அணுக்களுக்களும் பொருந்தும். இதை முதன் முதலில் நீல் போர் அணுக்களின் அமைப்பு பற்றிய அவரின் கோட்பாடுகளில் கூறியிருந்தார். ஐதரசன் (hydrogen) அணுவின் ஆரத்தையும் கணக்கிட்டார். மேலும் ஐதரசன் அணுவின் ஆற்றலைக் கணக்கிடுவதற்கான ஒரு சமன்பாட்டையும் கொடுத்தார்.
இந்த ஐதரசன் அணுவின் நிறமாலை வரிசை (Hydrogen spectral series) பல வகை படும். அவற்றுள் ஐந்து பின்வருமாறு:
- லைமன் வரிசை -ஏதாவது ஒருஆற்றல் மட்டத்திலிருந்து முதல் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
- பாமர் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து இரண்டாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
- பஸ்டன் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து மூன்றாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
- ப்ரகட் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து நான்காம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
- ப-புந்து (fபண்ட்) வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து ஐந்தாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
அனைத்து வரிசைகளும் ரிட்பெர்க் சமன்பாட்டை (Rydberg formula) பின்பற்றும்.[1]
ரீட்பெர்க் சமன்பாடு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bohr, Niels (1985), "Rydberg's discovery of the spectral laws", in Kalckar, J. (ed.), N. Bohr: Collected Works, vol. 10, Amsterdam: North-Holland Publ., pp. 373–9
- ↑ Mohr, Peter J.; Taylor, Barry N.; Newell, David B. (2008). "CODATA Recommended Values of the Fundamental Physical Constants: 2006". Committee on Data for Science and Technology (CODATA) 80 (2): 633. doi:10.1103/RevModPhys.80.633. Bibcode: 2008RvMP...80..633M. http://physics.nist.gov/cuu/Constants/codata.pdf.