நீல்சு போர்
நீல்ஸ் என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr, IPA: [/nels ˈb̥oɐ̯ˀ/], அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.[1]
நீல்ஸ் போர் Niels Bohr | |
---|---|
பிறப்பு | நீல்ஸ் ஃஎன்றிக் டேவிட் போர் Niels Henrik David Bohr 7 அக்டோபர் 1885 கோப்பனாஃகன், டென்மார்க் |
இறப்பு | 18 நவம்பர் 1962 கோப்பனாஃகன், டென்மார்க் | (அகவை 77)
தேசியம் | டென்மார்க் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கோப்பனாஃகன் பல்கலைக்கழகம்]] மான்ச்சசிட்டர் பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கோப்பனாஃகன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கிறிசிட்டியன் கிறிசிட்டியான்சென் Christian Christiansen எர்ண்ஸ்ட் ரதர்போர்டு Ernest Rutherford |
முனைவர் பட்ட மாணவர்கள் | என்றிக் ஆண்ட்டனி கிரேமர்சு Hendrik Anthony Kramers |
அறியப்படுவது | கோப்பனாஃகன் விளக்கம் Copenhagen interpretation]] Complementarity போர் அணு ஒப்புரு Bohr model சோமர்ஃவெல்டு-போர் கருத்தியம் பிகேஎசு (BKS) கருத்தியம் theory போர்-ஐன்சுட்டைன் கருத்துப்போர் |
தாக்கம் செலுத்தியோர் | எர்ணஸ்ட் ரதர்போர்டு |
பின்பற்றுவோர் | மாக்சு டெல்ப்ரூயிக் Max Delbrück வெர்ணர் ஐசன்பெர்கு லீசெ மைட்னெர் Lise Meitner |
விருதுகள் | நோபல் பரிசு (இயற்பியல்) 1922 |
குறிப்புகள் | |
அரால்டு போர் இவர் தம்பி, ஆகெ போர் (Aage Bohr) இவர் மகன். |
வாழ்க்கை
தொகுஇளைய பருவம்
தொகுநீல்ஸ் போர் டென்மார்க் நட்டைச் சேர்ந்த கோப்பன்ஹேகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், கிறித்தவ மதத்தின் உலுத்திரன் பிரிவு மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் பேராசிரியராக இருந்தார்.[2] தாய் எல்லென் நீ ஆட்லர்போர் செல்வாக்கு மிக்க யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர்[3]. நீல்ஸ் போரின் தம்பி ஹெரால்டு போர் (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். நீல்ஸ் போர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும் ஆர்வலரும் ஆவார்.[4] கல்வித் துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த தாயார் [2], உடலையல் துறையில் சிறந்து விளங்கிய தந்தை ஆகியோரின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய வளர்ப்பு முறை இவர்களின் மேதைத் தன்மைக்கு வித்திட்டது.
கல்வி
தொகுநீல்ஸ் போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார்.[5] பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.[6]
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.[7][8] ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது[9]. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.[10][11][8]
ஆய்வுகள்
தொகுஎலக்ட்ரான் கொள்கையின் அடிப்படையில் உலோகங்களின் தன்மைகள் என்ற இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை கருத்தியல் அடிப்படையில் இயன்றளவும் சிறப்பாகக் கருதக் கூடியதாக அமைந்துள்ளது. பிளாங்க் என்ற அறிவியலறிஞரின் கதிரியக்கத் துகள் தொகுதி பற்றிய கருத்துகளுக்கு உறுதுணையாக இவை அமைந்தன.[12]
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற ஜெ. ஜெ. தாம்சன் (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன.[13] அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன.[14] கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் போர் ஒப்புரு (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார்.[12] நீல்ஸ் போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியன் ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார்.[15] இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.[16]
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
குவாண்டம் இயக்கவியல் பொருத்தமட்டில் வரி நிறமாலை ஒரு சில அனுமானதை அடிபடையாக கொண்டுள்ளது. அவை பின்வருமாறு
1. ஒரு அணு ஒரு சில தனித்தனியான ஆற்றல் மட்டங்களில் மட்டுமே இருக்க முடியும். இந்த ஆற்றல் மட்டங்களில் ஏற்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தவாறு மின்காந்த ஆற்றலை வெளியிடவோ அல்லது உள்ளிளுக்கவோ ஒரு அணுவால் முடியும். இந்த ஆற்றல் மட்டங்களை "நிலையான ஆற்றல் மட்டம்" ( Stationary states ) என்று அழைக்கப்படும்.
2. இந்த ஆற்றல் மாற்றங்களால் ஏற்படும் மின்காந்த அலையின் அதிர்வு ஒரு குறிபிட்ட எண் மட்டுமே! இதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறியலாம்.
இங்கு
h = என்பது பிளாங் மாறிலி
f = மின்காந்த அலையின் அதிர்வெண்
இந்த உள்ளார்ந்த அறிதல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
குடும்பம்
தொகு1912 இல் நீல்ஸ் போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.[18] இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர்.[19][18] மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிறந்து விளங்கினர். அவர்களில் ஆகெ நீல்ஸ் போர் 1975 இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார். இவருடைய இன்னொரு மகன் ஹான்ஸ் ஹென்ரிக் மருத்துவராகவும், எரிக் என்பவர் வேதிப் பொறியாளராகவும், எர்னஸ்ட் ஒரு வழக்குரைஞராகவும் விளங்கினார்கள்.[20][21]
பணிகள்
தொகு1913 இல் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுகள் பற்றிய சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.[22] இதே போன்ற பணியை 1914- 16 இல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டார். 1926 இல் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் கருத்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இலிருந்து இவருடைய இறுதிக்காலம் 1962 வரை அப்பல்கலைக்கழகத்தில் இவருக்காகவே நிறுவப்பட்ட கருத்தியல் இயற்பியல் நிறுவனத்தில் (Institute for Theoretical physics) தலைவராக இருந்து செயல்பட்டார்.
அணு அமைப்பு பற்றிய இவருடைய எடுகோள்கள் 1922 இல் இவருக்கு உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசியைப் பெற்றுத் தந்தன.[23][24] 1930 இலிருந்து இவருடைய ஆய்வுகள் அணுவின் உட்கரு அமைப்பு பற்றியும், அவற்றில் ஏற்படும் பொருள் நிலைமாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றியே அமைந்தன. அணுவின் உட்கருப் பகுதியின் மிகச் சிறிய அமைப்பில் ஏற்படும் உட்கரு விசை பற்றியும், அதனால் ஏற்படு விளைவுகள் பற்றியும் இவர் பலவிதமான விளக்கங்களை தரமான வகையில் அளித்தார்.[25][26]
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
நீல்ஸ்போரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[27] அதனால் நீல்ஸ் போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார்.[28] நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950 இல் இவருடைய இக்கருத்துகள் "ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்" (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
இவருடைய இறுதிக் காலத்தில் மூலக்கூறு உயிரியலில் இவருடைய கவனம் திரும்பியது. இது குறித்த இவருடைய கருத்துகள் இவருடைய மறைவுக்குப் பிறகு "Light and Life Revisited " என்ற நூலாக வெளியிடப்பட்டது.
சிறப்புகள்
தொகு- ராயல் டேனிஷ் அறிவியல் கழகத்தின் தலைவர்.
- டேனிஷ் புற்றுநோய்க் கழகத்தின் தலைவர்.
- டேனிஷ் அணு ஆற்றல் செயல்துறையின் தலைவர்.
- லண்டன் ராயல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினர்.
- பல நாடுகளைச் சேர்ந்த ராயல் கழகங்களில், அவற்றின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
- இவரைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வ்கையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- அவருடைய உருவம் பொறித்த (அந்நாட்டு மதிப்பில்) பணநோட்டும் வெளியிடப்பட்டன.
மறைவு
தொகுஇருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்ஸ் போர் 1962 இல் நவம்பர் 18 ஆம் தேதி இறந்தார்.
துணைநூற் பட்டியல்
தொகு- Bohr, Niels (2008). Nielsen, J. Rud (ed.). Volume 1: Early Work (1905–1911). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
- Bohr, Niels (2008). Hoyer, Ulrich (ed.). Volume 2: Work on Atomic Physics (1912–1917). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Nielsen, J. Rud (ed.). Volume 3: The Correspondence Principle (1918–1923). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Nielsen, J. Rud (ed.). Volume 4: The Periodic System (1920–1923). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Stolzenburg, Klaus (ed.). Volume 5: The Emergence of Quantum Mechanics (mainly 1924–1926). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Kalckar, Jørgen (ed.). Volume 6: Foundations of Quantum Physics I (1926–1932). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Kalckar, Jørgen (ed.). Volume 7: Foundations of Quantum Physics I (1933–1958). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Thorsen, Jens (ed.). Volume 8: The Penetration of Charged Particles Through Matter (1912–1954). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Peierls, Rudolf (ed.). Volume 9: Nuclear Physics (1929–1952). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Favrholdt, David (ed.). Volume 10: Complementarity Beyond Physics (1928–1962). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Aaserud, Finn (ed.). Volume 11: The Political Arena (1934–1961). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Aaserud, Finn (ed.). Volume 12: Popularization and People (1911–1962). Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help) - Bohr, Niels (2008). Aaserud, Finn (ed.). Volume 13: Cumulative Subject Index. Niels Bohr Collected Works. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-53286-2. இணையக் கணினி நூலக மைய எண் 272382249.
{{cite book}}
: Unknown parameter|authormask=
ignored (help)
குறிப்புகள்
தொகு- ↑ Murdoch, Dugald (2000) "Bohr" in Newton-Smith, N. H. (ed.) A Companion to the Philosophy of Science. Great Britain: Blackwell Publishers, p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-23020-3.
- ↑ 2.0 2.1 Pais 1991, ப. 44–45, 538–539.
- ↑ Pais 1991, ப. 35–39.
- ↑ There is, however, no truth in the oft-repeated claim that Niels Bohr emulated his brother, Harald, by playing for the Danish national team. Dart, James (27 July 2005). "Bohr's footballing career". The Guardian (London). http://www.guardian.co.uk/football/2005/jul/27/theknowledge.panathinaikos. பார்த்த நாள்: 26 June 2011.
- ↑ "Niels Bohr's school years". Niels Bohr Institute. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
- ↑ Pais 1991, ப. 107–109.
- ↑ Pais 1991, ப. 98–99.
- ↑ 8.0 8.1 "Life as a Student". Niels Bohr Institute. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
- ↑ Rhodes, Richard (1986). The Making of the Atomic Bomb. New York: Simon and Schuster. pp. 62-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-44133-7.
- ↑ Rhodes 1986, ப. 62–63.
- ↑ Pais 1991, ப. 101–102.
- ↑ 12.0 12.1 Bohr, Niels (1913). "On the Constitution of Atoms and Molecules". Philosophical Magazine 26 (1): 476. doi:10.1038/093268a0. Bibcode: 1914Natur..93..268N. http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html.
- ↑ Pais 1991, ப. 121–125.
- ↑ French & Kennedy 1985, ப. 7.
- ↑ French & Kennedy 1985, ப. 50–67, 385–391.
- ↑ French & Kennedy 1985, ப. 39–47.
- ↑ G. Venkataraman. Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 103, Universities Press, 1997.
- ↑ 18.0 18.1 Pais 1991, ப. 226, 249.
- ↑ French & Kennedy 1985, ப. 204.
- ↑ "Niels Bohr – Biography". நோபல் பரிசு. பார்க்கப்பட்ட நாள் 10 November 2011.
- ↑ "Ernest Bohr Biography and Olympic Results – Olympics". Sports-Reference.com. Archived from the original on 6 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Pais 1991, ப. 134–135.
- ↑ Pais 1991, ப. 215.
- ↑ French & Kennedy 1985, ப. 91–97.
- ↑ Bohr, N.; Hans Kramers; John C. Slater (1924). "The Quantum Theory of Radiation". Philosophical Magazine. 6 76 (287): 785–802. doi:10.1080/14786442408565262. http://www.cond-mat.physik.uni-mainz.de/~oettel/ws10/bks_PhilMag_47_785_1924.pdf. பார்த்த நாள்: 18 February 2013.
- ↑ Pais 1991, ப. 232–239.
- ↑ Pais 1991, ப. 476.
- ↑ Pais 1991, ப. 382–386.
மேற்கோள்கள்
தொகு- Aaserud, Finn(2006). "Niels Bohr's Mission for an 'Open World'". Proceedings of the 2nd ICESHS, 706–709. 26 June 2011 அன்று அணுகப்பட்டது. பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம்
- Favrholdt, David (1992). Niels Bohr's Philosophical Background. Copenhagen: Munksgaard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7304-228-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Faye, January (1991). Niels Bohr: His Heritage and Legacy. Dordrecht: Kluwer Academic Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-1294-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Faye, J.; Folse, H., eds. (2010). Niels Bohr and Contemporary Philosophy. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-4299-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - French, A. P.; Kennedy, P. J., eds. (1985). Niels Bohr: A Centenary Volume. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-62415-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Heisenberg, Elisabeth (1984). Inner Exile: Recollections of a Life With Werner Heisenberg. Boston: Birkhauser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8176-3146-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hilberg, Raul (1961). The Destruction of the European Jews. Vol. 2. New Haven, Connecticut: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-09557-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jammer, Max (1989). The Conceptual Development of Quantum Mechanics. Los Angeles: Tomash Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88318-617-9. இணையக் கணினி நூலக மைய எண் 19517065.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jones, R . V. (1978). Most Secret War. London: Hamilton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-241-89746-7. இணையக் கணினி நூலக மைய எண் 3717534.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kieler, Jørgen (2007). Resistance Fighter: A Personal History of the Danish Resistance. Translated from the Danish by Eric Dickens. Jerusalem: Gefen Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978–965–229–397–8.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); Invalid|ref=harv
(help) - Pais, Abraham (1991). Niels Bohr's Times, In Physics, Philosophy and Polity. Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-852049-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rhodes, Richard (1986). The Making of the Atomic Bomb. New York: Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-44133-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Richardson, W. Mark; Wildman, Wesley J., eds. (1996). Religion and Science: History, Method, Dialogue. London, New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-91667-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stadtler, Bea; Morrison, David Beal; Martin, David Stone (1995). The Holocaust: A History of Courage and Resistance. West Orange, N.J.: Behrman House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87441-578-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rozental, Stefan (1967). Niels Bohr: His Life and Work as Seen by his Friends and Colleagues. Amsterdam: North-Holland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-86977-7. Previously published by John Wiley & Sons in 1964.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: postscript (link) - Simmons, John (1996). The Scientific 100: A Ranking of the Most Influential Scientists, Past and Present. Syracuse, New Jersey: Carol Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8065-1749-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stewart, Melville Y. (2010). Science and Religion in Dialogue, Two Volume Set. Maiden, Massachusetts: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-8921-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - United States (1972). The Conferences at Quebec 1944. Foreign Relations of the United States. Washington, D.C.: U.S. Government Printing Office. இணையக் கணினி நூலக மைய எண் 631921397.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Witham, Larry (2006). The Measure of God: History's Greatest Minds Wrestle with Reconciling Science and Religion. San Francisco: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-085833-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - The Coins and Banknotes of Denmark (PDF). Danmarks Nationalbank. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-87251-55-6. Archived from the original (PDF) on 23 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 7 September 2010.
காண்க
தொகுமேலதிக வாசிப்புக்கு
தொகு- Blaedel, Niels (1988). Harmony and Unity: The Life of Niels Bohr. Madison, Wisconsin: Science Tech. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910239-14-2. இணையக் கணினி நூலக மைய எண் 17411890.
- Moore, Ruth (1966). Niels Bohr: The Man, His Science, and the World They Changed. New York: Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-63101-6. இணையக் கணினி நூலக மைய எண் 712016.
- Ottaviani, Jim; Purvis, Leland (2004). Suspended In Language: Niels Bohr's Life, Discoveries, And The Century He Shaped. Ann Arbor, Michigan: G.T. Labs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9660106-5-5. இணையக் கணினி நூலக மைய எண் 55739245.
- Frayn, Michael (2000). Copenhagen. New York: Anchor Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-413-72490-5. இணையக் கணினி நூலக மைய எண் 44467534.
- Pasachoff, Naomi E. (2003). Niels Bohr: Physicist and Humanitarian. Berkeley Heights, New Jersey: Enslow Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7660-1997-3. இணையக் கணினி நூலக மைய எண் 49511560.
- Segrè, Gino (2007). Faust in Copenhagen: A Struggle for the Soul of Physics. New York: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-03858-X. இணையக் கணினி நூலக மைய எண் 76416691.
- Spangenburg, Ray; Moser, Diane Kit (2008). Niels Bohr: Atomic Theorist. New York: Chelsea House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-6178-5. இணையக் கணினி நூலக மைய எண் 190843462.
- Vilhjálmsson, Vilhjálmur Örn; Blüdnikow, Bent (2006). "Rescue, Expulsion, and Collaboration: Denmark's Difficulties with its World War II Past". Jewish Political Studies Review 18: 3–4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0792-335X. http://www.jcpa.org/phas/phas-vilhjalmsson-f06.htm. பார்த்த நாள்: 29 June 2011.
வெளியிணைப்புகள்
தொகு- "Niels Bohr Archive". Niels Bohr Archive. February 2002. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
- "The Bohr-Heisenberg meeting in September 1941". American Institute of Physics. Archived from the original on 4 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Aaserud, Finn (February 2002). "Release of documents relating to 1941 Bohr-Heisenberg meeting". Niels Bohr Archive. Archived from the original on 24 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
- "Resources for Frayn's Copenhagen: Niels Bohr". மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
- "Oral History interview transcript with Niels Bohr 31 October 1962". American Institute of Physics. Archived from the original on 8 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
- Feilden, Tom (3 February 2010). "The gunfighter's dilemma". பிபிசி. http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8493000/8493203.stm. பார்த்த நாள்: 2 March 2013. Bohr's researches on reaction times.