ஐதரசு ஆக்சைடு
வேதிச் சேர்ம வகை
ஐதரசு ஆக்சைடுகள் (Hydrous oxides) என்பவை ஓர் உலோகம், ஐதராக்சைடு மற்றும் பலவீனமாக பிணைக்கப்பட்ட நீர் மூலக்கூறு ஆகியவை இணைந்த ஒரு கனிமச் சேர்மங்களாகும். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- ஐதரசு பெரிக் ஆக்சைடு[1]
- ஐதரசு குப்ரிக் ஆக்சைடு[2]
- ஐதரசு தோரியம் ஆக்சைடு மற்றும் ஐதரசு தைட்டானியம் ஆக்சைடு[3]
- ஐதரசு அலுமினியம் ஆக்சைடு[4]
இவற்றில் சில, HFO மற்றும் HAO போன்றவை, அதிக நுண்துளைகள் கொண்ட மோசமான படிக அல்லது உருவமற்ற வடிவங்களில் வீழ்படிந்துள்ளன. எனவே இவை நீர் சுத்திகரிப்புக்கு உதாரணமாகப் பயன்படுத்தப்படும் நல்ல உறிஞ்சிகள் ஆகும். [5]
இன்னும் சில அரைத்திண்மக் கரைசலாக உள்ளன.
ஐதரசு ஆக்சைடு படலங்கள் மின்வினையூக்கிகள், உணரிகள், மின்தேக்கிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன..[6][7]
ஐதரசு பெரிக் ஆக்சைடு மற்றும் ஐதரசு அலுமினியம் ஆக்சைடு போன்றவை பாறைகளின் காலநிலை ஆக்சிசனேற்றத்தின் மூலம் இரும்பு உருவாக்கத்தில் பயன்படுகின்றன.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Weiser, H. B. (1920). "Hydrous Oxides. I". The Journal of Physical Chemistry 24 (4): 277–328. doi:10.1021/j150202a003. https://zenodo.org/record/1861992.
- ↑ Heitner-Wirguin, C.; Albu-Yaron, A. (1966). "Hydrous oxides and their cation exchange properties—II Structure and equilibrium experiments". Journal of Inorganic and Nuclear Chemistry 28 (10): 2379–2384. doi:10.1016/0022-1902(66)80129-X.

- ↑ Karthikeyan, K.G; Elliott, Herschel A. (1999). "Surface Complexation Modeling of Copper Sorption by Hydrous Oxides of Iron and Aluminum". Journal of Colloid and Interface Science 220 (1): 88–95. doi:10.1006/jcis.1999.6507. பப்மெட்:10550244. Bibcode: 1999JCIS..220...88K.
- ↑ Benjamin, Mark M.; Lawler, Desmond F. (13 June 2013). Water Quality Engineering: Physical / Chemical Treatment Processes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118632277.
- ↑ Paunovic, Milan; Scherson, Daniel (1997). Proceedings of the Third Symposium on Electrochemically Deposited Thin Films. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781566771696.
- ↑ Brandon, Erik J. (2003). Micropower and Microdevices: Proceedings of the International Symposium. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781566773874.
- ↑ Benjamin, Mark M.; Lawler, Desmond F. (13 June 2013). Water Quality Engineering: Physical / Chemical Treatment Processes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118632277.