ஐதராக்சிபீனமேட்டு
வேதிச் சேர்மம்
ஐதராக்சிபீனமேட்டு (Hydroxyphenamate) என்பது C11H15NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மயக்க மருந்தாகும். ஆக்சிபெனமேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இம்மருந்து இலிசுட்டிகா என்ற வணிகப் பெயரால் விற்கப்படுகிறது. ஏக்கமடக்கும் இம்மருந்து கார்பமேட்டு வகை மருந்தாகவும் வகைப்படுத்தப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இம்மருந்து விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற கார்பமேட்டு மயக்க மருந்துகளைப் போல இதுவும் வேதியியல் ரீதியாக மெப்ரோபமேட்டுடன் தொடர்புடையாதாகும். மெப்ரோமேட்டு மில்டவுன் என்ற வணிகப்பெயரால் விற்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டுதான் ஐதராக்சிபீனமேட்டு அமெரிக்க சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முதியோர்களுக்கு தினமும் 3 அல்லது நான்கு வேளை 200 மில்லி கிராம் அளவுக்கு மருந்தளவாக கொடுக்கவும் அப்போது பரிந்துரைக்கப்பட்டது.[1]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(2-ஐதராக்சி-2-பீனைல்பியூட்டைல்) கார்பமேட்டுe | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | இலிசுட்டிகா |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 50-19-1 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 5752 |
ChemSpider | 5549 |
UNII | MD0414799X |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D04476 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL2107215 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
SMILES | eMolecules & PubChem |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ American Medical Association Dept of Drugs (1977). AMA Drug Evaluations (3rd ed.). Littleton, Mass.: Pub. Sciences Group. p. N-61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88416-175-2. இணையக் கணினி நூலக மைய எண் 1024170745.