ஐதராபாத்து பிரியாணி

இந்தியாவின் ஒரு வகையான பிரியாணி
(ஐதராபாத் பிரியாணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐதராபாத்து பிரியாணி (Hyderabadi biriyani) என்பது ஒரு பிரியாணி உணவு வகை ஆகும். இது பாசுமதி அரிசி மற்றும் செம்மறி ஆட்டுக் கறி ஆகியவை கொண்டு சமைக்கப்படுகிறது.[1] தற்போதைய ஆந்திரப் பிரதேசின் ஐதராபாத்து நகரம் ஐதராபாத் நிசாம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அவர்களது அரண்மனை சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது..[2][3]

ஐதராபாத்து பிரியாணி
ஐதராபாத்து பிரியாணி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஆந்திரப் பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்பாசுமதி, இறைச்சி
ஐதராபாத்து பிரியாணி

சேர்மானப் பொருட்கள்

தொகு

பாசுமதி அரிசி, தயிர், வெங்காயம், எலுமிச்சை, கொத்தமல்லி, வாசனைப் பொருட்கள் மற்றும் இறைச்சியாக செம்மறியாடு அல்லது வெள்ளாடு அல்லது கோழி ஆகியவை.[1]

வகைகள்

தொகு

ஐதராபாத்து பிரியாணி அதை தயாரிக்கும் முறையைக் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அவை, கச்சி பிரியாணி மற்றும் பாக்கி பிரியாணி ஆகியவை.[4]

கச்சி பிரியாணி

தொகு

இதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்த்து கலக்கி இரவு முழுவதும் வைத்திருக்கப்படும். பின்னர் சமையலுக்கு முன்னர் தயிரோடு கலக்கி சேர்த்து வைத்து அதன் பின்னர் நீராவியில் சமைக்கப்படும்.[5]

பாக்கி பிரியாணி

தொகு

இதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைவானதாகும். மேலும் இறைச்சியானது பாசுமதி அரிசியை சமைக்கும் முன்னரே சமைக்கப்படும்.[6] இறைச்சிக்குப் பதிலாக காய்கறிகளைக் கொண்டும் இவ்வகை பிரியாணியைச் செய்யலாம். பொதுவாக இவ்வகை பிரியாணியோடு சேர்ந்து உண்ண தயிரில் வெங்காயம் சேர்த்த உணவைச் சேர்த்துக் கொள்வர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Colleen Taylor Sen (2004). Food culture in India. Greenwood Publication. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32487-5. பார்க்கப்பட்ட நாள் 12 october 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  2. "Andhra Pradesh / Hyderabad News : Legendary biryani now turns `single'". The Hindu. 2005-08-18. Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
  3. "Of biryani, history and entrepreneurship - Rediff.com Business". In.rediff.com. 2004-04-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
  4. "Metro Plus Chennai / Eating Out : Back to Biriyani". The Hindu. 2005-06-13. Archived from the original on 2009-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
  5. "Kacchi Biryani".
  6. "pakki Biryani".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்து_பிரியாணி&oldid=3773455" இலிருந்து மீள்விக்கப்பட்டது