ஐதராபாத் மாவட்டம், பாகிஸ்தான்


ஐதராபாத் மாவட்டம் (Haiderābād District) (சிந்தி மொழி: ضلعو حيدرآبادஉருது: ضِلع حیدرآباد‎),ஒலிப்பு பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தில் அமைந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஐதராபாத் நகரம் ஆகும். கீர்தார் தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஐதராபாத் மாவட்டம்
حيدرآباد
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் ஐதராபாத் மாவட்டத்தின் அமைவிடம்
சிந்து மாகாணத்தில் ஐதராபாத் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
தலைமையிடம்ஐதராபாத்
அரசு
 • AdministratorAftab Ahmed Khatri
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்34,29,471
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்4
இணையதளம்www.hyderabad.gov.pk

மாவட்ட நிர்வாகம்

தொகு

5,519 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஐதராபாத் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஐதராபாத் நகர்பறம், ஐதராபாத் கிராமப்புறம், லத்திபாபாத், குவாசிமாபாத் என நான்கு வருவாய் வட்டங்களாகவும், 410 வருவாய் கிராமங்களாகவும், 102 கிராம ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் மூன்று மாநகராட்சி மன்றங்களையும், நான்கு நகராட்சி மன்றங்களையும், எட்டு நகரக் குழுக்களையும், ஒரு இராணுவப் பாசறை நகரமும் கொண்டுள்ளது. [1]

மக்கள் தொகையியல்

தொகு

1998-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐதராபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 28,91,488 ஆகும். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (1981 - 98) 2.02% ஆக உள்ளது. மொத்த மக்களில் ஆண்கள் 1511025 (52.26 %); பெண்கள் 1380463 (47.74 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 109.5 ஆண்கள் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 523.9 நபர்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 44.2% ஆகும். [2]இம்மாவட்டத்தில் சிந்தி மொழி, உருது மொழி மற்றும் பஞ்சாபி மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • 1998 District census report of Hyderabad. Census publication. Vol. 59. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.