ஐதரோனியம் (Hydronium) என்பது நீர்க்கரைசல் நேர்மின் அயனியான H3O+ அயனியைக் குறிக்கும்.[1][2][3] [H3O]+ என்றும் இதை அடையாளப்படுத்தலாம். நீரை புரோட்டானேற்றம் செய்தால் ஐதரோனியம் உருவாகும். அர்ரீனியசு அமிலம் நீரில் கரைக்கப்படும் போது, ​​இது பெரும்பாலும் நேர்மின் சுமை அயனியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கரைசலில் உள்ள அர்ரீனியசு அமில மூலக்கூறுகள் ஒரு புரோட்டானை (ஒரு நேர்மின் சுமை ஐதரசன் அயனி, H+) சுற்றியுள்ள நீர் மூலக்கூறுகளுக்கு (H2O) கொடுக்கின்றன. உண்மையில், அமிலங்கள் அயனியாக்கம் செய்வதற்கும், நீரிய H+ மற்றும் இணை காரத்தை உருவாக்குவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நீர் மூலக்கூறுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும்.

ஐதரோனியம்
ஐதர்ரொட்சோனிய அயனியின் முக்கோணக் கூம்பகக் கட்டமைப்பைக் காட்டும் மூவளவு வரிப்படம்
ஐதர்ரொட்சோனிய அயனியின் முக்கோணக் கூம்பகக் கட்டமைப்பைக் காட்டும் மூவளவு வரிப்படம்
ஐதரோனிய அயனின் பந்துங்குச்சியும் மாதிரி
ஐதரோனிய அயனின் பந்துங்குச்சியும் மாதிரி
ஐதரொட்சோனிய நேரயனின் மூவளவு மின்னழுத்த மேற்பரப்பு
ஐதரொட்சோனிய நேரயனின் மூவளவு மின்னழுத்த மேற்பரப்பு
ஐதரோனியத்தின் வந்தர்வாலின் ஆரை
ஐதரோனியத்தின் வந்தர்வாலின் ஆரை
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சோனியம், ஒக்சோனியம்
வேறு பெயர்கள்
ஐதரோனிய அயனி
இனங்காட்டிகள்
13968-08-6 Y
பண்புகள்
H3O+
வாய்ப்பாட்டு எடை 19.02 கி மோல்;-1
காடித்தன்மை எண் (pKa) −1.7
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Reed, C.A. (2013). "Myths about the proton. The nature of H+ in condensed media". Acc. Chem. Res. 46 (11): 2567–2575. doi:10.1021/ar400064q. பப்மெட்:23875729. 
  2. Silverstein, Todd P. (2014). "The aqueous proton is hydrated by more than one water molecule: Is the hydronium ion a useful conceit?". J. Chem. Educ. 91 (4): 608–610. doi:10.1021/ed400559t. Bibcode: 2014JChEd..91..608S. 
  3. Thamer, M.; DeMarco, L.; Ramesha, K.; Mandel, A.; Tokmakoff, A. (2015). "Ultrafast 2D IR spectroscopy of the excess proton in liquid water". Science 350 (6256): 78–82. doi:10.1126/science.aab3908. பப்மெட்:26430117. Bibcode: 2015Sci...350...78T. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோனியம்&oldid=4114007" இலிருந்து மீள்விக்கப்பட்டது