ஐந்தாம் அரிவர்மன்
ஐந்தாம் அரிவர்மன் (Harivarman V) அல்லது இளவரசர் சுந்தரதேவன் (ஆட்சி. 1114–1129) சம்பாவின் அரசராவார். வாரிசு இல்லாமல் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் செயேந்திரவர்மனின் (1071–1113) மருமகனான இவர் சம்பாவின் அரசனாக நியமிக்கப்பட்டார். [1] [2] இவரது ஆட்சி அமைதியானது. இவர் 1116 மற்றும் 1120 இல் சொங் வம்ச அரசவைக்கு தனது தூதர்களை அனுப்பினார். சீன அரசவையால் இவர் "தங்க முத்திரையைக் கொண்ட அரண்மனையின் அரசர்" என்று அறிவிக்கப்பட்டார்.
அரிவர்மன் மீ சன் இந்து கோயில்களின் தொகுதிகளுக்கு பல நன்கொடைகளையும் கட்டிடங்களையும் வழங்கினார். [2]
இவருக்கும் வாரிசு இல்லாததால், தனது வளர்ப்பு மகனுக்கு 1129 இல் தேவராஜா என்ற பட்டத்தையும், 1133 இல் பட்டத்து இளவரசனாகவும் நியமித்தார். 1139 இல் பட்டத்து இளவரசர் மூன்றாம் செயேந்திரவர்மன் (ஆட்சி. 1139-1145) என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். [1] [3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Coedès 1975, ப. 164.
- ↑ 2.0 2.1 Lafont 2007, ப. 160.
- ↑ Lafont 2007, ப. 161.