மூன்றாம் செயேந்திரவர்மன்
மூன்றாம் செயேந்திரவர்மன் (Jaya Indravarman III) (சுமார் 1106-1145, ஆட்சி; 1139-1145) 12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சம்பா இராச்சியத்தின் அரசராக இருந்தார்.
மூன்றாம் செயேந்திரவர்மன் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ராஜாதி ராஜா | |||||||
சம்பாவின் அரசன் | |||||||
ஆட்சி | 1139–1145 | ||||||
முடிசூட்டு விழா | 1139 | ||||||
முன்னிருந்தவர் | ஐந்தாம் அரிவர்மன் | ||||||
பின்வந்தவர் | நான்காம் ருத்ரவர்மன் | ||||||
| |||||||
தந்தை | ஐந்தாம் அரிவர்மன் (தத்தெடுத்தல்) | ||||||
தாய் | ? | ||||||
பிறப்பு | 1106 சம்பா இராச்சியம் | ||||||
இறப்பு | 1145? விஜயா, சம்பா இராச்சியம் | ||||||
சமயம் | இந்து சமயம் |
ஐந்தாம் அரிவர்மன் வாரிசு இல்லாத மன்னராக இருந்ததால், 1129ல் பதவி துறந்தார். அவரது வளர்ப்பு மகன், மூன்றாம் செயேந்திரவர்மன், 1133 இல் சம்பாவின் பட்டத்து இளவரசனாக பரிந்துரைக்கப்பட்டார். 1131 ஆம் ஆண்டில், அங்கோர் ஆட்சியாளர் இரண்டாம் சூரியவர்மன் கேட்டுக் கொண்டதையடுத்து தாய் வியட்டைத் தாக்கி, 1132 இல் மூன்று மாகாணங்களைக் கைப்பற்றினார். 1139 இல், சம்பாவின் அரசரானார். இவரது ஆட்சிக் காலங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. 1140 இல் குவாங் நாமில் உள்ள மீ சன் இந்து கோயில்களின் தொகுதியில் கோயில்களைக் கட்டி நன்கொடைகளையும் வழங்கினார். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நா திரங்கில் உள்ள பூ நகர் கோவிலில் பூநகர் அன்னைக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.[1]
இந்திரவர்மன் தாய் வியட்டுடன் சமாதான உடன்படிக்கைக்கு வழிவகுத்ததாலும், கெமர் பேரரசின் தாய் வியட்டிற்கு எதிரான வீணான போர்களில் சேர மறுத்ததாலும், கெமர் அதற்குப் பதிலாக இவரது இராச்சியத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 1145 ஆம் ஆண்டில், இரண்டாம் சூரியவர்மன் சம்பாவின் மீது படையெடுப்பிற்கு தலைமை தாங்கினார். இது அவரது முந்தைய பேரழிவு போர்களைப் போலல்லாமல், அது வெற்றிகரமாக இருந்தது. கெமர் இராணுவம் விஜயாவின் சாம் தலைநகரைக் கைப்பற்றி, அதைக் கொள்ளையடித்தது . மேலும், மீ சன் கோவில்களை அழித்தது. கெமர் பேரரசு சாம் மன்னரை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவரை பதவி நீக்கம் செய்தது.[2][3]
இந்திரவர்மன் போரின் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். வரலாற்றாளர் மாஸ்பெரோ கூற்றின்படி, கெமரால் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம். [4]
சான்றுகள்
தொகு- ↑ Coedès 1975, ப. 164.
- ↑ Maspero 2002, ப. 75–76.
- ↑ Coedès 1975, ப. 160.
- ↑ Lafont 2007, ப. 161.
உசாத்துணை
தொகு- Coedès, George (1975), Vella, Walter F. (ed.), The Indianized States of Southeast Asia, University of Hawaii Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-824-80368-1
- Lafont, Pierre-Bernard (2007), Le Campā: Géographie, population, histoire, Indes savantes, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-84654-162-6
- Maspero, Georges (2002), The Champa Kingdom, White Lotus Co., Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-97475-3-499-3