ஐன்சுடைனியம்(III) ஆக்சைடு
ஐன்சுடைனியம்(III) ஆக்சைடு (Einsteinium(III) oxide) என்பது Es2O3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஆக்டினைடு வரிசை செயற்கைத் தனிமம் ஐன்சுடைனியத்தின் ஆக்சைடு சேர்மம் ஆகும். இது ஒரு நிறமற்ற திண்மம் ஆகும். ஐன்சுடைனியம்(III) ஆக்சைடின் மூன்று வகையான படிகவுருவியல் அமைப்புகள் அறியப்படுகின்றன. அணிக்கோவை அளவுரு a = 1076.6 ± 0.6 பிக்கோமீட்டர் பெற்றுள்ள பொருள் மைய கனசதுர வடிவம்; ஐன்சுடைனியம் அயனியின் அயனி ஆரம் 92.8 பிக்கோமீட்ட[2]ர் அளவிற்கு அனுமதிக்கிறது. ஒற்றைசரிவு படிகம், அறுகோணப் படிகம் என்பவை ஐன்சுடைனியம்(III) ஆக்சைடின் மற்ற இரண்டு படிக அமைப்புகளாகும். அறுகோணப் படிகமானது இலந்தனம்(III) ஆக்சைடின் அமைப்பில் இருக்கிறது[3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஐன்சுடைனியம் செசுகியுவாக்சைடு
இரு ஐன்சுடைனியம் மூவாக்சைடு ஐன்சுடைனியம்(III) ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
37362-94-0 | |
பண்புகள் | |
Es2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 554 கி/மோல் (253Es) |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
புறவெளித் தொகுதி | Ia3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மீநுண்ணளவு ஐன்சுடைனியம்(III) நைட்ரைடை காய்ச்சிக் குளிரவைத்தால் ஐன்சுடைனியம்(III) ஆக்சைடு தயாரிக்க முடியும்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102nd Edition, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, p. 1972.
- ↑ 2.0 2.1 R. G. Haire, R. D. Baybarz: "Identification and Analysis of Einsteinium Sesquioxide by Electron Diffraction", in: Journal of Inorganic and Nuclear Chemistry, 1973, 35 (2), S. 489–496; எஆசு:10.1016/0022-1902(73)80561-5.
- ↑ R. G. Haire, L. Eyring, in: Handbook on the Physics and Chemistry of Rare Earths, Vol. 18 Lanthanoids and Actinides Chemistry (hrsg. von K. A. Gscheidner, Jr., L. Eyring, G. R. Choppin, G. H. Lander), North-Holland, New York 1994, S. 414–505.
உசாத்துணை
தொகு- Haire, Richard G. (2006). "Einsteinium". In Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). Vol. 3 (3rd ed.). Dordrecht, the Netherlands: Springer. pp. 1577–1620. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_12. Archived from the original (PDF) on 2010-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.