ஐன்சுடைனியம்

ஐன்ஸ்டைனியம் (Einsteinium) என்பது (குறியீடு: Es) அணு எண் 99 ஐக் கொண்ட ஒரு செயற்கைத் தனிமம். ஆக்டினைடு வரிசையில் யுரேனியப் பின் தனிமங்களில் இத்தனிமம் ஏழாவதாகும். ஐன்ஸ்டைனியம் ஒரு மிருதுவான, வெள்ளிபோன்ற, இணைகாந்த உலோகமாகும்.

ஐன்ஸ்டைனியம்
99Es
Ho

Es

(Upu)
கலிபோர்னியம்ஐன்ஸ்டைனியம்பெர்மியம்
தோற்றம்
வெள்ளி-நிறம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஐன்ஸ்டைனியம், Es, 99
உச்சரிப்பு /nˈstniəm/
eyen-STY-nee-əm
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(252)
இலத்திரன் அமைப்பு [Rn] 5f11 7s2
2, 8, 18, 32, 29, 8, 2
Electron shells of Einsteinium (2, 8, 18, 32, 29, 8, 2)
Electron shells of Einsteinium (2, 8, 18, 32, 29, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வுகூடம் (1952)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 8.84 g·cm−3
உருகுநிலை 1133 K, 860 °C, 1580 °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2, 3, 4
மின்னெதிர்த்தன்மை 1.3 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 619 kJ·mol−1
பிற பண்புகள்
படிக அமைப்பு முகப்பு மையப் பருச்சதுரம்
காந்த சீரமைவு இணைக்காந்த வகை
CAS எண் 7429-92-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஐன்ஸ்டைனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
252Es செயற்கை 471.7 d α 6.760 248Bk
ε 1.260 252Cf
β 0.480 252Fm
253Es செயற்கை 20.47 d SF - -
α 6.739 249Bk
254Es செயற்கை 275.7 d ε 0.654 254Cf
β 1.090 254Fm
α 6.628 250Bk
255Es செயற்கை 39.8 d β 0.288 255Fm
α 6.436 251Bk
SF - -
·சா

ஐன்ஸ்டைனியம் 1952 ஆம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஐதரசன் குண்டு வெடிப்புச்[1] சிதைவுக் கூளங்களிலிருந்துக் கண்டறியப்பட்டத் தனிமமாகும். இத்தனிமம், உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பெயரினால் ஐன்ஸ்டைனியம் என்று அழைக்கப்படுகிறது. இதன் சாதாரணமாகக் காணப்படும் ஐசோடோப்பு ஐன்ஸ்டைனியம்-253 (அரைவாழ்வுக் காலம் 20.47 நாட்கள்[2]) சில அர்ப்பணிக்கப்பட்ட உயராற்றல் அணுவுலைகளில் கலிபோர்னியம்-253 சிதைவுகளிலிருந்து செயற்கை முறையில் (மொத்த உற்பத்தி ஓராண்டிற்கு ஒரு மில்லிகிராம் வீதம்) தயாரிக்கப்படுகிறது. இவ்விதம் அணுவுலைகளில் தயாரிக்கப்பட்ட ஐன்ஸ்டைனியம்-253 மற்ற சிதைவுகள், ஆக்டினைடுகளிலிருந்துச் சிக்கலான வழிமுறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வகங்களில், ஐன்ஸ்டைனியத்தின் பிற ஐசோடோப்புகள் கனத்த ஆக்டினைடு தனிமங்களை இலகுவான அயனிகளைக் கொண்டுத் தாக்கிக் குறைந்த அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. ஐன்ஸ்டைனியம் குறைந்த அளவுகளில் தயாரிக்கப்படுவதாலும், மிகச் சுலபமாகத் தயாரிக்கப்படும் இதன் ஐசோடோப்பின் அரைவாழ்வு காலம் குறைவாக இருப்பதாலும் இத்தனிமம் தற்பொழுது நடைமுறைப் பயன்பாடுகளில் இல்லை. என்றாலும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளில் ஐன்ஸ்டைனியம் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 1955 ஆம் ஆண்டு முதன்முதலில் புதிய தனிமமான மெண்டலீவியத்தின் 17 அணுக்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது[3].

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்&oldid=3956057" இலிருந்து மீள்விக்கப்பட்டது