ஐரோப்பாவில் தமிழர்

தற்கால தமிழர்களுக்கும் ஐரோப்பியருக்குமான தொடர்பு ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியினாலேயே ஏற்பட்டது. பிரித்தானிய, பிரெஞ்சு, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பிய காலனித்துவ அதிகாரங்கள் தமிழர்களை ஆண்டனர். எனினும் அக்காலத்தில் தமிழர் ஐரோப்பா சென்று வசிக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்து, 1950 களின் பின்னரே தமிழர்கள் தொழில்துறை வல்லுனர்களாக பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்கு பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஈழ அகதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு துறையினர் இடம்பெற்றார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வம்சாவளியினரும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார விருத்தி பெற்று வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள் மற்றும் பிற நாடுகளில் பரந்து வாழுகின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 500 000 - 600,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

புகழ்பெற்ற ஐரோப்பியத் தமிழர்

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பாவில்_தமிழர்&oldid=1674512" இலிருந்து மீள்விக்கப்பட்டது