ஐரோப்பிய இடலை
ஐரோப்பிய இடலை | |
---|---|
ஐரோப்பிய இடலை மரம், சாக்கடல், யோர்தான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Oleaceae
|
பேரினம்: | |
இருசொற் பெயரீடு | |
Olea europaea லி |
ஐரோப்பிய இடலை அல்லது ஆலிவ் மரம் (Olea europea) என்பது நடுநிலக் கடல் வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.[1] இந்த எண்ணை சமையலுக்கும் விளக்கு எரிக்கவும் பயன்படுகின்றது. ஆலிவ் எண்ணெயை சமயச்சடங்குகளின்போதும் பிற சமயங்களிலும் உடலில் தேய்த்துக் கொள்வதும் உண்டு. ஆலிவ் கனிகள், எண்ணெய் ஆகியன மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைப் பொருட்கள் சவர்க்காரம் செய்யவும் உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் கம்பளியைப் பதப்படுத்தவும் ஆலிவ் எண்ணெய் பயன்படுகிறது. ஆலிவ் காய்கள் ஊறுகாய் போடவும் தின்பண்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன.
சொல்லியல்
தொகுOlea europaea என்றால் இலத்தீன் மொழியில் ஐரோப்பிய இடலை என்று பொருள். ஐரோப்பாவில் காணப்படும் இடலை இனம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
வகைப்பாடு
தொகுஐரோப்பிய இடலை இனத்தில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன.
- ஐரோப்பிய இடலை சிற்றினம் ஐரோப்பியம் (Olea europaea subsp. europaea)
- ஐ. இ. சிற். கூர்முனை (O. e. subsp. cuspidata)
- ஐ. இ. சிற். வாஞ்ச்சியம் (O. e. subsp. guanchica)
- ஐ. இ. சிற். செர்ரிவடிவி (O. e. subsp. cerasiformis)
- ஐ. இ. சிற். மொரோக்கோனியம் (O. e. subsp. maroccana)
- ஐ. இ. சிற். லப்பெர்ரின் (O. e. subsp. laperrinei)
விளக்கம்
தொகுஆலிவ் மரம் சுமார் 10 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கரும்பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறமானவை. மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகம் பயிராகிறது. இதன் கனிகள் நீள் சதுரமாகவோ முட்டை வடிவிலோ இருக்கும். பார்க்கப் பளபளப்பாக இருக்கும். ஆலிவ் கனி சற்றுக் கசப்புச் சுவையுடையதாகும். கனிகள் கருநீலம் அல்லது கருமை நிறமுடையனவாகும். கனியில் ஒருவிதை மட்டுமே இருக்கும். ஆலிவ் மரம் ஒட்டுமுறையிலும் பதியன் முறையிலும் அதிகம் பயிரிடப்படுகின்றது. அடிமரத்திலிருந்து பக்கக் கன்றுகள் தோன்றி வளரும். ஆலிவ் மரம் தரும் பலன் ஆண்டுக்காண்டு வேறுபடும்.[2]
வரலாறு
தொகுஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆலிவ் மரத்தை பற்றிய விரிவான குறிப்புகள் கிரேக்க, உரோம இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆலிவ் இலை சமாதானச் சின்னமாகக் கருதப்படுகிறது.
பிறமொழிப் பெயர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "FAO, 2004". Apps3.fao.org. Archived from the original on 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
- ↑ இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை முஸ்தபா, பதிப்பு 1994, பக்கம் 52.53