ஐரோப்பிய வெள்ளரி
ஐரோப்பிய வெள்ளரி (European cucumber) விதை இல்லாத வெள்ளரிக்காய் வகையாகும். [1][2]) மற்ற வகை வெள்ளரிக்காய்களை விட ஐரோப்பிய வெள்ளரி நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும்.
இவற்றின் மீது மெழுகு அடுக்கு இருக்காது. பழுக்கும்போது தோல் மென்மையாக இருக்கும். [3][4]
இந்த வெள்ளரிகள் நீண்ட நால் கெடாமல் இருக்கவும் சிறந்த புத்துணர்ச்சிக்காகவும் நெகிழிதாள்களில் உறை இடப்படுகின்றன. விதை இல்லாத வகையாக இருப்பதால் இவை உட்கொள்ளும் போது விதையெடுக்கவோ அல்லது உரிக்கப்படவோ தேவையில்லை. [1][5]
வேறு சில வகை வெள்ளரிக்காய்களைக் காட்டிலும் அதிக விலையும் குறைந்த சுவைமணம் கொண்டவையாகவும் இவை இருக்கும். [5] ஐரோப்பிய வெள்ளரிகள் பச்சை காய்கறியாகவும் ஊறுகாயாகவும் பயன்படுத்தப்படுகின்றன. [1][2] இவற்றை நீளமாகவும் அகலமாகவும், மெல்லிய சீவல்களாகவும் துண்டுகளாக்கலாம். வறுத்து அரைத்து கூழாகவும் சமைக்கலாம். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Alden, Lori. "Cucumbers". foodsubs.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Hot House Cucumbers". specialtyproduce.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
- ↑ "Archived copy". Archived from the original on 29 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.foodsubs.com/Squcuke.html
- ↑ 5.0 5.1 Gardener, Geek (27 August 2010). "Growing Cucumber – European Cucumbers". geekgardener.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.