ஐ. எம். பேய்

சீன-அமெரிக்க கட்டடக் கலைஞர்

ஐ. எம். பேய் எனப் பொதுவாக அறியப்படும் இயோ மிங் பேய் (Ieoh Ming Pei, 26 ஏப்ரல் 1917 – 16 மே 2019), பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற சீனாவில் பிறந்த அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர் உயர் நவீனத்துவக் கட்டிடக்கலையின் கடைசி முன்னணிக் கட்டிடக்கலைஞர் எனக் கருதப்படுகிறார். இவர் கல், காங்கிறீட்டு, கண்ணாடி, உருக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பண்பியல்சார் (abstract) வடிவங்களை உருவாக்குகிறார். இவரே 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான ஆசியக் கட்டிடக்கலைஞர்களில் ஒருவர் எனலாம். இவரது கட்டிடங்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.[1]

இயோ மிங் பேய்
I. M. Pei
貝聿銘
Ieoh Ming Pei.jpg
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 26, 1917(1917-04-26)
குவாங்சௌ, சீனக் குடியரசு
இறப்பு16 மே 2019(2019-05-16) (அகவை 102)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
பாடசாலைபென்சில்வேனியா பல்கலைக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (இளநிலை)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுநிலை)
பணி
கட்டிடங்கள்ஜான் எஃப். கென்னடி நூலகம், பாஸ்டன்
வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் கிழக்குக் கட்டடம்
லூவர் பிரமிது, பாரிசு
சீன வங்கிக் கோபுரம்
விருதுகள்ரோயல் தங்கப் பதக்கம்
பிறிட்ஸ்கர் பரிசு

பேய் சீனாவின் குவாங்டொங்கில் உள்ள குவாங்சூவில், ஜியாங்சூவின் சூசூ என்னும் இடத்தைச் சேர்ந்த பிரபலமான குடும்பமொன்றில் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பம் 15 ஆம் நூற்றாண்டில் இருந்தே சூஷூவில் வாழ்ந்து வந்தது. இவரது தந்தை ஒரு வங்கி அலுவலர். பிற்காலத்தில் இவர் சீன வங்கியின் இயக்குனராகவும், சீனாவின் மத்திய வங்கியின் ஆளுனராகவும் பணியாற்றினார். இவருடைய குடும்பம் பின்னர் ஹாங் காங்கிற்கு இடம் பெயர்ந்தது. தந்தையார் சாங்காயிலிருந்த சீன வங்கியின் இயக்குனர் பொறுப்பை ஏற்றபோது அவர்கள் ஹாங் காங்கிலிருந்து சாங்காய்க்குச் சென்றனர்.

ஐ. எம். பேய் ஹாங்காங்கில் உள்ள சென். பவுல்ஸ் கல்லூரியிலும், பின்னர் சாங்காயில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகத்திலும் கல்விகற்றார். தனது 18 ஆவது வயதில் கட்டிடக்கலை கற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தனது கட்டிடக்கலைப் படிப்பை மேற்கொண்டார். அவர் கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டத்தை 1940 ஆம் ஆண்டில் மசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றுக்கொண்டார். 1940 ஆம் ஆண்டுக்கான அல்பா ரோ சி பதக்கமும், எம்.ஐ.டியின் பயண உதவித்தொகையும், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் நிறுவனத்தின் தங்கப்பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்தொகு

  1. Goldberger, Paul (16 May 2019). "I.M. Pei, Master Architect Whose Buildings Dazzled the World, Dies at 102". The New York Times. 17 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எம்._பேய்&oldid=2734858" இருந்து மீள்விக்கப்பட்டது