ஒசதா பெர்னாண்டோ

துடுப்பாட்டகாரர்

போதியபதுகே ஒசதா பியூமல் பெர்னாண்டோ(Bodiyabaduge Oshada Piyumal Fernando பிறப்பு 15 ஏப்ரல் 1992),பொதுவாக ஒசதா பெர்னாண்டோ என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் இவர் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் இவர் ஜில்லா மரியான் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டில் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார்.[1]

உள்ளூர் போட்டிகள் தொகு

2011 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 11 இல் நடைபெற்ற பிரிமியர் கோப்பை தொடரில் இவர் காலி துடுப்பாட்ட சங்கம் சார்பாக முதல் தர துடுப்பாட்ட போட்டியில் அறிமுகமானார்.[2]

மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண துடுப்பாட்ட தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார் .[3][4] 2018–19 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற எஸ்.எல்.சி இருபது20 போட்டித் தொடரிலிவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[5] 2018–19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் 9 போட்டிகளில்1,181 ஓட்டங்கள் எடுத்தார் இதில் ஆறு 100 ஓட்டங்கள் அடங்கும் .இதன்மூலம் அதிக ஒட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார் [6]

மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் தம்புல்லா அணியில் இவர் இடம் பெற்றார் .[7]

சர்வதேச போட்டிகள் தொகு

பிப்ரவரி 2019 இல், இலங்கை துடுப்பாட்ட அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இலங்கை அணி சார்பாக இவர் தேர்வானார்.

2019 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம்செய்து விளையாடியது. பிபரவரி 13,அன்று தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது போட்டியின் போது, பெர்னாண்டோ தனது முதல் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். குசால் மெண்டிஸுடன் சேர்ந்து, 213 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 இலக்குகளில் வெற்றி பெற்றது. இவர் 75 பந்துகளில் 106 ஓட்டங்லள் எடுத்தார். மெண்டிஸ் 110 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் இலம்ங்கைத் துடுப்பாட்ட அணி 2-0 என்று தொடரை வென்றது. மேலும் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை வென்று சாதனை படைத்தது.[9]

அதே மாதத்தின் பிற்பகுதியில், இவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[10] செப்டம்பர் 2019 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாடு இருபது20 அணியில் இவர் இடம் பெற்றார்.[11] இவர் அக்டோபர் 9, 2019 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கைக்காக பன்னாட்டு இருபது20 போட்டியில் அமுகமானார்.[12] இந்த போட்டியில் இவர் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் இலங்கை 13 ஓட்டங்களில் வென்றது மற்றும் பாகிஸ்தானை 3-0 எனும் கணக்கில் வென்றது.[13]

குறிப்புகள் தொகு

  1. "Oshada Fernando". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
  2. "Premier League Tournament Tier A at Colombo, Apr 1-3 2011". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
  3. "Cricket: Mixed opinions on Provincial tournament". http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
  4. "All you need to know about the SL Super Provincial Tournament" இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
  5. "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018. 
  6. "Premier League Tournament Tier A, 2018/19: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
  7. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  8. "1st Test, Sri Lanka tour of South Africa at Durban, Feb 13-17 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
  9. "Rude end to South Africa's seven series home streak". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/26060086/rude-end-south-africa-seven-series-home-streak. 
  10. "1st ODI, Sri Lanka tour of South Africa at Johannesburg, Mar 3 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  11. "Thirimanne and Shanaka to lead Sri Lanka in Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 September 2019.
  12. "3rd T20I (N), Sri Lanka tour of Pakistan at Lahore, Oct 9 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  13. "Oshada Fernando 'reminded me of Mahela' - SL selector thrilled with new crop". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசதா_பெர்னாண்டோ&oldid=3344259" இலிருந்து மீள்விக்கப்பட்டது