அரசு கலை அறிவியல் கல்லூரி, ஒசூர்

(ஒசூர் அரசு கலை அறிவியல் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒசூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Hosur) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2013 செப்டம்பர் மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது. இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக ஒசூர் இராயகோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கியது.[1] இக்கலூரிக்கு ஒசூர் தின்னூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தின் பின்புறம் புதிய கட்டடம் கட்ட 2015 சூன் 5 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் காணொளியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 5.83 ஏக்கர் பரப்பளவில் 4609 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டங்கள் கட்டப்பட்டது. கட்டடங்கள் 2017 மார்ச் 7 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் காணொளியில் திறந்து வைக்கப்பட்டன.[2] இக்கல்லூரியில் 2019 காலக்கட்டத்தில் முதல்வர் உட்பட 37 விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மேலும் இதே காலக்கட்டத்தில் இங்கு மொத்தம் 1600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அரசு கலை அறிவியல் கல்லூரி, ஓசூர்
கல்லூரியின் நுழைவாயில்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013 செப்டம்பர்
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்எசு. சிறீதரன்
கல்வி பணியாளர்
37
மாணவர்கள்1600
அமைவிடம், ,

பாடப்பிரிவுகள்

தொகு

இளங்கலை

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணினி அறிவியல்
  • பொருளாதாரம்[3]
  • கணிதம்
  • புள்ளியியல்
  • வணிகவியல்

முதுகலை

தொகு
  • தமிழ்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. "அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் திறப்பு". மாநகரச்செய்திகள்: 2. மார்ச் 2017. doi:10. 
  3. [2]

வெளியிணைப்புகள்

தொகு