ஒசூர் அரசு மருத்துவமனை

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை

ஓசூர் அரசு மருத்துவமனை என்பது கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையாகும்.[1] இந்த மருத்துவமனை 1874 இல் துவக்கப்பட்டது. இது தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நாள்தோரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், விபத்தில் காயமுற்றவர்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். நோயாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே வட்ட அளவில் 200 படுக்கைகள் கொண்ட அரசு மருத்தவமனை இது ஒன்றுதான். இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவை செயல்படுகின்றன. இந்த மருத்தவமனை தூய்மை இந்தியா திட்டத்தில் மாநில அளவில் தூய்மைய்யான மருத்துவமனை மற்றும் சிறப்பான சேவை அளிக்கும் மருத்துவமனைகளில் வட்ட அளவில் செயல்படும் மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனையாக 2017ஆம் ஆண்டு தமிழக அளவில் தேர்வு பெற்று விருது வழங்கப்பட்டுள்ளது.[2]

ஒசூர் அரசு மருத்துவமனை
தமிழ்நாடு அரசு
ஒசூர் அரசு மருத்துவமனை முகப்பு
அமைவிடம் ஏரித் தெரு, தேன்கனிக்கோட்டை சாலை, ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
மருத்துவப்பணி பொதுமருத்துவமனை
வகை முழு சேவை மருத்துவமனை
படுக்கைகள் 200
நிறுவல் 1874
வலைத்தளம் ஒசூர் அரசு மருத்துவமனை
பட்டியல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "government hospetal". http://www.medindia. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஓசூர் அரசு மருத்துவமனை தேசிய விருது பெற்று சாதனை". தி இந்து: 5. பெப்ரவரி 2017. doi:17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசூர்_அரசு_மருத்துவமனை&oldid=2582484" இலிருந்து மீள்விக்கப்பட்டது