ஒடிசா கைவினை அருங்காட்சியகம்
ஒடிசா கைவினை அருங்காட்சியகம் (OOdisha Crafts Museum - Kala Bhoomi ) கலாபூமி எனவும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திலுள்ள ஒரு அருங்காட்சியகமாகும். ஆர்க்கிடெக்ட்ஸ் ஸ்டுடியோவால் வடிவமைக்கப்பட்ட இது ஒடிசாவின் கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] இது ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாய்க் அவர்களால் 2018 மார்ச் 22 அன்று திறந்து வைக்கப்பட்டது.[2] இந்த அருங்காட்சியகம் 12.68 ஏக்கர் பரப்பளவில் எட்டு காட்சியகங்கள், திறந்தவெளி திரையரங்கம், பயிற்சிப் பட்டறைப் பகுதி மற்றும் கைவினைப் பொருட்கள் கடை என பிரிக்கப்பட்டுள்ளது.
ଓଡ଼ିଶା ହସ୍ତଶିଳ୍ପ ସଂଗ୍ରହାଳୟ | |
கலாபூமியின் நுழைவாயில் | |
நிறுவப்பட்டது | 2018 |
---|---|
அமைவிடம் | சில்பி விகார், போக்ரிப்பூர், புவனேசுவரம், இந்தியா |
ஆள்கூற்று | 20°15′06″N 85°48′24″E / 20.2516°N 85.8068°E |
உரிமையாளர் | ஒடிசா அரசு |
வலைத்தளம் | www |
இந்த அருங்காட்சியகம் ஒடியக் கைவினைஞர்களின் கைவினைத்திறனைக் கொண்டாடுகிறது. இங்கு அவர்களின் தலைசிறந்த படைப்புகளை காட்சிப்படுத்துகிறது. இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஒரு காட்சி பகுதியும் மற்றும் ஒரு நேரடி விளக்கப் பிரிவும் உள்ளது. காட்சி பகுதி மாநிலம் முழுவதிலுமிருந்து கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளைப் பற்றிய காட்சியகங்களில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் நேரடி விளக்கப் பிரிவில் திறந்தவெளி அரங்கம் மற்றும் தனி பட்டறைகள் உள்ளன.
காட்சியகங்கள்
தொகுகலா பூமி என்பது மாநிலத்தைச் சுற்றியுள்ள சில பழமையான நினைவுச்சின்னங்களில் இன்னும் காணக்கூடிய செம்புரைக்கல் போன்ற உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கலா பூமியில் 10 காட்சியகங்கள் உள்ளன. அவற்றில் 9 காட்சியகங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இங்கு மேலும் இரண்டு தொகுதிகள் உள்ளன. கைவினைப் பொருட்கள் தொகுதியில் மரப்பட்டை, பாரம்பரிய ஓவியங்கள், கல் மற்றும் மரச் சிற்பங்கள் மற்றும் இயற்கை பொருள் கைவினைப் பொருட்களின் காட்சியகங்கள் உள்ளன. மறுபுறம் கைத்தறி ஆலையில் நெசவு செய்வதற்கு முந்தைய நுட்பங்கள், பழங்குடி கைவினைப் பொருள்கள், ஜெகந்நாதர் கலாச்சாரத்தின் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றன.
ஒடிசாவின் நடன வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேலும் ஒரு காட்சியகமும் தற்போது கட்டுமானத்தில் உள்ளது.
திறந்திருக்கும் நேரம்
தொகுகாலை 10:00 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இது திறந்திருக்கும். சுதந்திர தினம், தீபாவளி/காளி பூஜை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் இது மூடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்
தொகு-
பாரம்பரிய மாட்டு வண்டி
-
பிப்பிலி அலங்கார வேலைப்பாடுகள்
-
பிப்பிலி அலங்கார வேலைப்பாடுகள்
-
கோத நச்சா பொம்மை
-
காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரகலாத நாடகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Mishra, Sweta. "Experience the essence of Odisha at Kala Bhoomi | OdishaSunTimes.com". odishasuntimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-06-30.
- ↑ "Museum to promote handicrafts" (in en) இம் மூலத்தில் இருந்து 13 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613234434/https://www.telegraphindia.com/states/odisha/museum-to-promote-handicrafts-217745.