ஒதிகுப்பம் பாறை ஓவியங்கள்
ஒதிகுப்பம் பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகில் உள்ள ஒதிகுப்பம்[1] என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும். ஒதிகுப்பம் சிற்றூரானது பருகூர்-பசவணா கோயில் பேருந்து சாலையில், பசனணா கோயிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒதிகுப்பம் சிற்றூரை ஒட்டி உள்ள மலைப் பகுதி கதிரப்பன் மலை என்று அழைக்கப்படுகிறது. இம் மலையில் இயற்கையாக அமைந்த குகைப்பகுதி ஒன்று சன்யாசி கெவி என்று அழைக்கப்படுகிறது. இந்த குகையில் வெள்ளை வண்ணத்தால் ஆன பாறை ஓவியங்கள் உள்ளன.[2]
சன்யாசி கெவி குகையில் உள்ள ஓவிய தொகுப்புகள் கோட்டோவிய முறையில் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் மனித வடிவங்கள் மட்டுமே வரையப்படுள்ளன. இதில் சில தெளிவற்ற குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன. கிருட்டிணகிரி பகுதியில் விலங்குகள் இடம் பெறாத பாறை ஓவியங்களில் இவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
இதில் வரிசையாக உள்ள மனித வடிவ காட்சி இடம் பெற்றுள்ளது. இது ஒரு சடங்கின் நடன நிகழ்ச்சி அல்லது மந்திர சடங்கு நிகழ்ச்சி போன்றவற்றை சித்தரிப்பதாக இருக்கலாம் என்கிறார் த. பார்த்திபன். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ச. செல்வராஜ், பெருங் கற்படைக் காலம் (இரும்பு காலம் முதல் சங்ககாலம் வரை-4, கட்டுரை, தினமணி 11, திசம்பர், 2015
- ↑ 2.0 2.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். pp. 167–168.
{{cite book}}
: Check date values in:|year=
(help)