ஒத்தையடி பாதையிலே

ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒத்தையடிப்பாதையிலே (Othaiyadipathaiyele) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், பௌர்ணமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஒத்தயடி பாதையிலே
இயக்கம்ஏ. எஸ். பிரகாசம்
தயாரிப்புகோவிந்தம்மாள் இரத்னம்
எஸ். வி. ஆர். எண்டர்பிரைசஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசங்கர்
பௌர்ணமி
வெளியீடுசூலை 4, 1980
நீளம்3825 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
 • சங்கர் (சங்கர் கணேஷ்)- செல்லையா (தபால்காரர்) அறிமுகம்
 • பௌர்ணமி - மருத்துவர் பௌர்ணமி (அறிமுகம்)
 • ஜக்கு - கொள்ளைக் கூட்டத் தலைவர், செல்லையாவின் தந்தை
 • மாயா
 • நாஞ்சில் நளினி - பார்வதி அம்மாள், செல்லையாவின் தாய். ,(மீனாட்சி அம்மாள்)
 • ஐசரி வேலன் - பஞ்சாயத்து தலைவர், தபால் அலுவலக தலைவர், முதியோர் கல்வி தலைவர்
 • லூசு மோகன் - சவரத் தொழிலாளி
 • ராஜ் மகேந்திரா
 • நவீன் கிருஷ்ணா
 • ஆர் ஜி மூர்த்தி
 • ஜெய் ஹரி
 • லூஸ் மோகன்
 • உதயகுமார்
 • முரளி
 • அண்ணாமலை
 • சீதா
 • சுஜாதா
 • ரஜினி
 • பிரோசி
 • பிரேமா
 • காஞ்சனா
 • ஆர். தேவகி
 • பி. இலட்சுமி
 • பாபு கே. எல். டி. ராஜு
 • டி. கே. கண்ணா

திரைக்குழு

தொகு
 • சண்டைக் காட்சி - எஸ். எஸ். மணி, துரை, ஆறுமுகம்
 • குதிரைப்படை வழங்கியவர் - கோவிந்தராஜ்
 • பாடல்கள் - புலமைப்பித்தன், ஏ. எஸ். பிரகாசம், கங்கை அமரன்
 • பாடகர்கள் - ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, வாணி ஜெயராம் ஆசாரமணி
 • நடனம் - சுந்தரம்
 • நடன உதவி - ஜீவா மற்றும் இலட்சுமி
 • உதவி இயக்கம் - இராஜ் மகேந்திரா
 • ஒளிப்பதிவு - இலட்சுமன் கோரே
 • இசை - சங்கர் கணேஷ்

திரைப்படத்தில் நடித்த பௌர்ணமி என்ற நடிகை 1980 இல் மிஸ் ஆந்திரா பட்டத்தினை பெற்றவர். தமிழ்த் திரையுலகில் இத்திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மலை கிராமம் ஒன்றில் செல்லையாவும் அவருடைய தாயும் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லக்கூடிய ஒற்றை ஒத்தையடி பாதை அமைந்துள்ளது. அந்தப் பாதையில் தினந்தோறும் செல்லையா நகரத்திற்கு சென்று தபால்களையும் மணியாடர் பணங்களையும் பெற்று வந்து கிராமத்திற்கு சேர்க்கின்றார்.

கிராமத்தில் இருக்கும் மக்கள் அரிசி உட்பட அத்தியாவசிய தேவைகளை கூறி செல்லையாவிடம் வாங்கிக் கொள்கின்றனர். ஒருமுறை சிக்கலான பிரசவத்தினை பார்ப்பதற்காக அருகில் உள்ள ஊரில் இருந்து பௌர்ணமி என்ற மருத்துவர் கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்தில் அடிப்படையில் மருத்து வசதிகளை பூர்த்தி செய்வதற்காக அங்கேயே தங்கி விடுகிறார்.

மலை கிராமத்திற்கு அருகே இருக்கும் காட்டில் சில கொலைகாரர்கள் தங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கான உணவு எவ்வாறு வருகின்றது என்பதனை காவல்துறையினர் அறிய செல்லையாவிடம் உதவி கேட்கின்றனர். கிராமத்தில் இருக்கும் பூசாரி ஒருவருக்கு செல்லையா தினமும் இரண்டு படி அரிசி இணை தருகின்றார் அந்த அரிசியும் அவர் வாங்கிக் கொடுத்த குரங்கு மார்க் பீடியும் கொள்ளைக்காரர்கள் உணவு அருந்தக் கூடிய இடத்தில் இருப்பதனை செல்லையா அறிந்து பூசாரிக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் உள்ள தொடர்பினை அறிந்து கொள்கிறார்.

கொலைகாரர்கள் மலை கிராமத்தில் கொள்ளை அடிக்க வரும் பொழுது அந்த தகவலை காவல்காரர்களிடம் சொல்லி செல்லையா காட்டிக் கொடுப்பதால் கொள்ளையர்களுக்கும் செல்லையாவிற்கும் இடையேயான மோதல் உருவாகிறது.

இதனிடையே மலைகிராமத்தை கொள்ளையடிக்கும் பொழுது கொள்ளை கூட்டத்தின் தலைவன் தன்னுடைய மனைவியின் தாலியை காண்கின்றார். கொள்ளை கூட்டத்தின் தலைவன் செல்லையாவின் தந்தை என்பதை செல்லையாவின் தாய் அறிந்து கொள்கிறார். ஒலிம்பிக் மாரத்தானில் ஓடுவதற்காக செல்லையா முயற்சி செய்வதை அறிந்து கொள்ளையர்கள் மூலமாக செல்லையாவினை கொல்வதற்கு பணம் தரப்படுகிறது.

கொள்ளை கூட்டத தலைவனை செல்லையா காவலர்களிடம் ஒப்படைக்கின்றார். இதனால் பாவம் கொண்ட மற்ற பள்ளியர்கள் ஒத்தையடி பாதையில் வெடிகுண்டு வைக்கின்றனர். மலை கிராமத்தில் காலரா பரவும் பொழுது மருத்துவர் பௌர்ணமி உதவுகின்றார். அவரிடம் போதுமான மருந்து இல்லை என்பதால் செல்லையா அதே ஒற்றையடி பாதையில் மருந்தினை வாங்கி வந்து கிராமத்திற்கு தருகின்றார். ஆனால் வெடிகுண்டு வெடிப்பின் காரணமாக அவர் தனது காலை இழக்கின்றார்.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1] பாடல் வரிகளை புலமைப்பித்தன், பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம், கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "நண்டு சாறு காச்சிக்கிட்டு" கணேஷ் (சங்கர் கணேஷ்)
2 "ஏ உன்னதான் எங்க பாக்குற" ("செப்புக்குடம்") கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 05:19
3 "உன் எண்ணம் தான்" எஸ். ஜானகி 04:36
4 "வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது" கணேஷ் (சங்கர் கணேஷ்)

மேற்கோள்கள்

தொகு
 1. "Sangar – Ganesh". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தையடி_பாதையிலே&oldid=3941334" இலிருந்து மீள்விக்கப்பட்டது