ஒந்து மொட்டேய கதே
ஒந்து மொட்டேய கதே (Ondu Motteya Kathe, பொருள் ஒரு வழுக்கையின் கதை ) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னட காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் ராஜ் பி செட்டி எழுதி இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உஷா பண்டாரி, ஷைலாசிறீ, பிரகாஷ் துமினாடு, அம்ருதா நாயக், சிரேயா அஞ்சன், விஜே வினீத், ராகுல் அமின், தீபக் ராய் பனாஜே ராமதாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துளனர். படமானது நேர்மறையான விமர்சனங்களுடன் 2017 சூலை 7 அன்று வெளியானது. தி இந்து இதை "ஆண்டின் கன்னட படம்" என்று அழைத்தது. [1] இந்தப் படம் சிறந்த கன்னடப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றது.
ஒந்து மொட்டேய கதே | |
---|---|
இயக்கம் | இராஜ் பி. செட்டி |
தயாரிப்பு | சுகன் பிரசாத், பவன் குமார் |
கதை | இராஜ் பி. செட்டி |
இசை | மிதுன் முகுந்தன் |
நடிப்பு | இராஜ் பி. செட்டி, உசா பண்டாரி, அம்ருதா நாயக், தீபக் ராஜ் பனாஜி |
படத்தொகுப்பு | பிரவீன் சிரியன் |
கலையகம் | பவன் குமார் ஸ்டுடியோஸ், மேங்கோ பிக்கில்ஸ் எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 6 சூலை 2017 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
இந்த படம் 2019 இல் மலையாளத்தில் தமாஷா [2] [3] [4] என்றும் இந்தியில் 2019 இல் உஜ்தா சாமன் என மறுஆக்கம் செய்யப்பட்டது. [5] [6] [7] [8] [9]
கதை
தொகுஜனார்தன் ஒரு கல்லூரியில் கன்னட பேராசிரியராக இருக்கிறார். மாணவர்கள் உட்பட அவரது வழுக்கை குறித்து கிண்டல் செய்கின்றனர். அவரின் வழுக்கை தலையால் திருமணமும் தள்ளிப்போகிறது. 29 வயதுக்குள் திருமணம் ஆகவில்லை என்றால் சாமியார் ஆகவேண்டியதுதான் என்கிறார் ஜோசியர். இதனால் தீவிரமாக பெண் தேடுகிறார். காதல் தோல்விகளையும் எதிர்கொள்கிறார். உடல் இச்சையைக் கடந்து துறவி ஆகும் முயற்சியில் தோல்வியடைகிறார். கல்லூரியில் அவருடன் படித்த சற்று பருமனான பெண்ணை மீண்டும் சந்திக்கிறார். அவளுக்கு அவனைப் பிடிக்கிறது. ஆனால் அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. இந்நிலையில் ஜனார்தனனுக்கு திருமணம் ஆனாதா இல்லையா என்பதே கதையின் முடிவு.
நடிப்பு
தொகு- ராஜ் பி. செட்டி ஜனார்த்தனனாக
- உஷா பண்டாரி ஜனார்த்தனின் தாயாக
- ஸ்ரேயா அஞ்சன் விற்பனை பிரதிநிதிப் பெண்
- மோஹாவாக
- சைலாசிறீ சரளாவாக
- அம்ருதா நாயக் இ-மேடமாக
- விஜே வினீத்
- மைம் ராமதாஸ்
- தீபக் ராய் பனாஜே குருஜியாக
- பிரகாஷ் துமினாட் சினிவாசாக
- சைன் செட்டி ஆங்கில விரிவுரையாளராக
விருதுகள்
தொகுவிருது | வகை | பெறுபவர் | முடிவு | குறிப்பு |
---|---|---|---|---|
65 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | கன்னட சிறந்த படம் | சுஹான் பிரசாத் பவன் குமார் |
வெற்றி | [10] [11] |
சிறந்த இயக்குனர் கன்னடம் | ராஜ் பி.ஷெட்டி | பரிந்துரை | ||
சிறந்த துணை நடிகை கன்னடம் | உஷா பண்டாரி | பரிந்துரை | ||
7 வது சைமா | சிறந்த திரைப்படம் | சுஹான் பிரசாத் பவன் குமார் |
பரிந்துரை | [12] [13] [14] [15] |
சிறந்த அறிமுக நடிகர் | ராஜ் பி.ஷெட்டி | பரிந்துரை | ||
சிறந்த அறிமுக இயக்குனர் | ராஜ் பி.ஷெட்டி | பரிந்துரை |
== மேற்கோள்கள் ==
- ↑ Kumar, S. Shiva (4 January 2018). "Some memorable films from the south of India in 2017". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
- ↑ "Thamaasha movie review: Vinay Forrt lends grace and charm to an endearing Everyman- Entertainment News, Firstpost". Firstpost. 23 June 2019.
- ↑ "Vinay Forrt's 'Thamasha' from the Sudani team". Sify. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ http://veeyen.com/film-reviews/thamasha-2019-malayalam-movie-review-veeyen/
- ↑ Scroll Staff. "'Ujda Chaman' trailer: Another balding hero's saga of finding love". Scroll.in.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/ujda-chaman-director-abhishek-pathak-in-plans-to-slap-bala-makers-with-a-legal-notice/articleshow/71534006.cms
- ↑ https://www.freepressjournal.in/entertainment/bollywood/ujda-chaman-director-plans-to-send-legal-notice-to-bala-makers
- ↑ https://www.timesnownews.com/entertainment/news/bollywood-news/article/ujda-chaman-director-planning-to-send-legal-notice-to-bala-makers-this-is-a-clear-case-of-copyright-violation/502405
- ↑ https://bangaloremirror.indiatimes.com/entertainment/bollywood/akshay-kumar-ayushmann-khurrana-sunny-singhs-bald-move/articleshow/71496359.cms
- ↑ "Nominations for the 65th Jio Filmfare Awards (South) 2018". Filmfare. 4 June 2018. Archived from the original on 30 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Winners of the 65th Jio Filmfare Awards (South) 2018". Filmfare. 16 June 2018. Archived from the original on 17 June 2018. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Nomination List / Kannada". SIIMA. siima.in. Archived from the original on 30 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Nominations list for the SIIMA 2017 announced!". Sify.com. Archived from the original on 2017-06-05. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "SIIMA Awards 2018 - Telugu, Kannada nomination list out". International Business Times. 5 August 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
- ↑ "SIIMA Awards 2018 Telugu Kannada winners list". International Business Times. 16 September 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஒந்து மொட்டேய கதே
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2021-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Facebook இல் Ondu Motteya Kathe