ஒன்கே மொழி (Önge language) என்பது சிறிய அந்தமான் தீவில் உள்ள ஒன்கே மக்களினால் பேசப்படும் மொழி. இது அந்தமான் மொழிக்குடும்பத்தின் ஒரு பிரிவான ஒங்கன் மொழிகளின் இரண்டு மொழிகளில் ஒன்றாகும்.

ஒன்கே
நாடு(கள்)இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
94[1]  (date missing)
அந்தமான் (இருக்கலாம்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2-
ISO 639-3oon
{{{mapalt}}}
1850களுக்கு முன்னர் அந்தமான் தீவுகளின் இன, மற்றும் மொழிப் பிரிவுகளைக் காட்டும் வரைபடம்

ஒன்கே மொழி சிறிய அந்தமானிலும், வடக்கேயுள்ள சில சிறிய தீவுகளிலும் பேசப்படுகிறது. அத்துடன் தெற்கு அந்தமான் தீவின் தென் முனையிலும் சிலர் பேசுகின்றனர். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, அந்தமானில் பிரித்தானியரின் வருகையுடன், அத்துடன், இந்திய விடுதலைக்குப் பின்னரும், பெரும்பரப்பில் இருந்து சிறிய அந்தமான் தீவுக்கு பெருமளவு குடியேற்றம் இடம்பெற்றதன் காரணமாக, ஒன்கே மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைய ஆரம்பித்தது, ஆனாலும் அண்மைய காலங்களில் இவ்வெண்ணிக்கையில் சிறிதளவு ஏற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது[2]. தற்போது இம்மொழி பேசும் பழங்குடிகளின் எண்ணிக்கை 95 ஆகும்[3]. இவர்களும் இப்போது சிறிய அந்தமானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு குடியேற்றப் பகுதியில் மட்டும் வாழ்ந்து வரும் நிலையில், இம்மொழி உலகின் மிக அரிதான மொழியாகக் கணிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்கே_மொழி&oldid=3237204" இலிருந்து மீள்விக்கப்பட்டது