ஒன்னா-புஜீஷா
ஒன்னா-புஜீஷா (Onna-bugeisha) ("பெண் தற்காப்புக் கலைஞர் ") என்பவர் ஜப்பானிய பிரபுக்களுக்குச் சொந்தமான ஒரு பெண் வீராங்கனையாவார். இந்த பெண்கள் பெரும்பாலும் தேவைப்படும் காலங்களில் சாமுராய் ஆண்களுடன் போரில் ஈடுபட்டனர். நிலப்பிரபுத்துவ ஜப்பானில் உள்ள புஷி (சாமுராய்) வகுப்பில் உறுப்பினர்களாக இருந்த அவர்கள், போரின் போது தங்கள் வீடு, குடும்பம் மற்றும் மரியாதை ஆகியவற்றைப் பாதுகாக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்றிருந்தனர். தோமோ கோசன், நக்கானோ தேக்கோ, மற்றும் ஹஜோ மசாகோ போன்றவர்கள் குறிப்பிடத்தக்க ஒன்னா-புஜீஷாவின் பிரபலமான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
வரலாறு
தொகுஆரம்பகால வரலாறு
தொகுபுகழ்பெற்ற சாமுராய் வகுப்பு தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஜப்பானிய போராளிகள் ஒரு வாள் மற்றும் ஈட்டியைப் பயன்படுத்த அதிக பயிற்சி பெற்றனர். பெண்கள் நாகினாட்டா, கைகென் மற்றும் தான்டோஜுட்சு கலையை போரில் பயன்படுத்த கற்றுக்கொண்டனர். இத்தகைய பயிற்சி ஆண் போராளிகள் இல்லாத சமூகங்களில் பாதுகாப்பை உறுதி செய்தது. அத்தகைய ஒரு பெண், பின்னர் பேரரசி ஜிங்கு (கி.பி. 169-269) என்று அழைக்கப்பட்டார்.இவர் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை ஊக்குவிக்க தனது திறமைகளைப் பயன்படுத்தினார். ஜப்பானின் பதினான்காம் பேரரசரான இவரது கணவர் சாய் பேரரசர் சாய் போரில் கொல்லப்பட்ட பின்னர் கி.பி 200 இல் கொரியா மீது படையெடுப்பிற்கு வழிவகுத்த ஒன்னா புஜீஷாவாக அவர் அங்கீகரிக்கப்பட்டார். [1]
புராணத்தின் படி, இவர் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் கொரியாவை வெற்றிகரமாக கைப்பற்றினார். இவரது இருப்பு மற்றும் இவரது சாதனைகள் பற்றிய சர்ச்சைகள் இருந்தபோதிலும், இவர் ஒன்னா புஜீஷாவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவரது மரணத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிங்குவால் ஜப்பானில் ஊக்குவிக்கப்பட்ட சமூக பொருளாதார கட்டமைப்புகளை மீற முடிந்தது. 1881ஆம் ஆண்டில், பேரரசர் ஜிங்கு ஒரு ஜப்பானிய பணத்தாளில் இடம்பெற்ற முதல் பெண்மணி ஆனார். கள்ளநோட்டு அச்சிடுவதைத் தடுக்க இவரது படம் செவ்வக காகிதத்தில் அச்சிடப்பட்டது. [1]
காமகுரா காலம்
தொகுஜென்பீ போர் (1180–1185) என்பது ஹையான் காலத்தின் பிற்பகுதியில் இரண்டு மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த ஜப்பானிய குலங்களான டெய்ரா மற்றும் மினமோட்டோ ஆகிய இரு குலங்களுக்கு இடையிலான போரைக் குறிக்கிறது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தைரியமான மற்றும் அர்ப்பணிப்புள்ள சாமுராய் கதைகளை நினைவுகூரும் பொருட்டு தி டேல் ஆஃப் தி ஹைக் என்ற காவியம் இயற்றப்பட்டது. [2] அவர்களில் மினாமோட்டோ குலத்தைச் சேர்ந்த மினாமோட்டோ நோ யோஷினகாவின் ஊழியரான டோமோ கோசன் என்பவரும் ஒருவராவார். 1184 பிப்ரவரி 21, அன்று அவாசு போரின்போது, தனது உறவினர் மினாமோட்டோ நோ யோரிடோமோவின் படைகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள யோஷினகாவுக்கு இவர் உதவினார்.
இவர் ஒரு வரலாற்று நபராக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், தோமோ கோசன் பல பாரம்பரிய நாகினாட்டா பள்ளிகள் உட்பட போர்வீரர் வகுப்பின் பெரும்பகுதியை பாதித்துள்ளார். தோமோ நோ மோனோகடாரி மற்றும் பல்வேறு உக்கியோ-இ போன்ற கலை நாடகங்களிலும் போரில் இவரது நடவடிக்கைகள் அதிக கவனத்தைப் பெற்றன. காலம் செல்ல செல்ல, ஓன்னா-புஜீஷாவின் செல்வாக்கு ஓவியங்களிலிருந்து அரசியலுக்கு வழிவகுத்தது.
ஜென்பீ போரின் மற்றொரு பிரபலமான பெண் தளபதி ஹங்காகு கோசன் என்பவராவார். இவர் தோமோ கோசன் மினாமோட்டோ குலத்தின் கூட்டாளியாக இருந்தபோது, ஹங்காகு தைரா குலத்துடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு முக்கிய பெண் தளபதிகளின் இருப்பு இந்த காலகட்டத்தில் பெண்களின் நிலை எதிர்கால காலங்களை விட குறைவான சமத்துவமற்றதாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில் இன்னும் பல பெண்கள் சாமுராய் ஆக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களில் பலர் வரலாற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 History of Japanese. Bank of Japan 1996–2009 பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ McCullough, Helen (1988). The Tale of the Heike. Standford, CA: Standford UP. p. 6.
சான்றுகள்
தொகு- Szczepanski, K. (2009). Samurai Women of Japan. Library of Congress Prints Collection. About.com: Asian History. 3 December 2009.
- Beasley, W. G. (1999). The Japanese Experience: A Short History of Japan. University of California Press.
- Amdur, Ellis. (2009). Women Warriors of Japan: The Role of Arms-Bearing Women in Japanese History. Koryu Books, 2009.
- Jansen, Marius B. (2000) The Making of Modern Japan. The Belknap Press of Harvard University Press 2000
- Yamakawa Kikue; trans Nakai, Kate Wildman (2001) Women of the Mito Domain: Recollections of Samurai Family Life. Stanford University Press 2001