ஒன்றொழி பொதுச்சொல்

ஒன்றொழி பொதுச்சொல் என்பது உயர்திணை மற்றும் அஃறிணையில் அமைந்த சொற்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவாய் அமைந்த சொல். குறிப்பால் ஒருபாலை நீக்கிப் பொருள் உணர்த்துவது ஆகும். இது குறிப்பு மொழியுள் அடங்கும்.

சான்று:

மாடு வண்டி இழுத்தது.

மாடு என்னும் சொல் பசுவையும் காளையையும் குறிக்கும் பொதுச்சொல். எனினும், வண்டி இழுக்கும் செயலில் பசு ஈடுபடுத்தப்படுவது கிடையாது எனவே மாடு என்னும் சொல் இத்தொடரில் பசுவை நீக்கி காளையைக் குறித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றொழி_பொதுச்சொல்&oldid=1576162" இலிருந்து மீள்விக்கப்பட்டது