வண்டி (ஆங்கிலத்தில்: vehicle, இலத்தீனில்:vehiculum ) எனப்படுவது ஒரு நகரும் எந்திரமாகும். மனிதர்கள், சரக்குப் பொதிகள், தேவைப்படும்போது மற்ற உயிரினங்கள் போக்குவரத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள எந்திரமே வண்டியாகும். மிதிவண்டிகள், விசையுந்துகள், சிற்றுந்துகள், தொடர்வண்டிகள், கப்பல்கள், படகுகள் மற்றும் வானூர்திகள் போன்றவை வண்டிகள் வகையில் வரும்.

தரையில் ஓடாத வண்டிகள், கலம் என்றழைக்கப்படும். காட்டாக, தோணி, பாய்மரக் கப்பல், வானூர்தி, கவிகை ஊர்தி, விண்வெளி ஓடம் போன்றவற்றைக் கூறலாம்.

தரையில் ஓடும் வண்டிகள், அவை இயங்கும்வகையைப் பொறுத்து மூன்று வகைப்படும்:

  1. சக்கர வண்டி
  2. சாலை வண்டி
  3. தண்டவாள வண்டி

ISO 3833- 1977 எனும் செந்தரம், சாலை ஊர்திகளுக்கென உள்ள இந்திய அமைவனச் செந்தரமாகும். சாலை ஊர்தியின் வகைகள், விதிமுறைகள், வரையறைகளை இச்செந்தரம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

பெயர்வியக்கம்

தொகு

பெயர்வியக்கம் அல்லது நகர்வு மற்றோர் ஊர்தியாலோ அல்லது விலங்கினாலோ இழுக்கப்படும்போது ஏற்படுகிறது அல்லது ஆற்றலால் ஏற்படுகிறது. கலப்பின ஊர்திகள் ஆற்றலைப் பயன்படுத்த,பல வழிதடங்களில் கடக்கும் வகையில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.

வரலாறு

தொகு
 
கையிழு வண்டி, சிந்து வெளி நாகரிகம் (கிமு3000–1500). [தேசிய அருங்காட்சியகம், புது தில்லியில் உள்ளது.

இலக்கியத்தில் கிமு2000க்கும் முன்பே வண்டிகள் குறிப்பிடப்படுகின்றன. The Indian sacred book இருக்கு வேதம் states that men and women are as equal as two wheels of a cart. ஆட்கள் இழுக்கும் கைவண்டிகள் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.19ஆம் நூற்றாண்டளவிலும் அமெரிக்காவின் சமவெளிகளில் பயணம் செய்த மர்மோனியர்களால் 1856-1860 அளவில் கைவண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. [1]

வண்டியின் வரலாறு சக்கர வரலாற்றுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்தது.

முதலில் சிறுவண்டிகளைக் குறித்த இச்சொல் கால அடைவில் எந்தவொரு பொருள் கொள்முதல் செய்யும் அல்லது மக்கள்செல்லும் வண்டியையும் அதன் சக்கர எண்ணிக்கையையோ சுமையையோ இழுவகையையோ சாராமல் குறிப்பிடலாயிற்று.

தொடக்கத்தில் வண்டி இழுவை விலங்குகளாக எருது, குதிரை, கழுதை, நீர்யானை, ஆடு, நாய்களும் பயன்படுத்தப் பட்டன.

ஆற்றல் வாயில்கள்

தொகு

வண்டி நகர்வதற்கு கண்டிப்பாக ஒரு ஆற்றல் வாயில் தேவை. பாய்மரப் படகு, சூரிய ஆற்றலில் இயங்கும் தானுந்து போன்றவற்றைப் போல ஆற்றலை சுற்றியுள்ள சூழல்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆற்றலை எந்த வடிவில் வேண்டுமானாலும் தேக்குதல் இயலும் ஆனால் அது தேவைப்படும்போது மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும், மேலும் தேக்ககத்தின் ஆற்றல்வீதமும் வண்டியின் தேவைக்கேற்ப இருக்க வேண்டும்.

பொதுவான ஆற்றல் வாயிலாகப் பயன்படுவது எரிபொருள் ஆகும். வெளிஎரி பொறி எரியக்கூடிய அனைத்துப் பொருள்களையும் எரிபொருளாகப் பயனபடுத்தக்கூடியது. உள்ளெரி பொறி மற்றும் ஏவூர்தி பொறி போன்றவை குறிப்பிட்ட எரிபொருளை மட்டும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, பொதுவாக பெட்ரோல், டீசல், அல்லது எத்தனால் ஆகியவற்றை உட்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆற்றலைத் தேக்க உதவும் மற்றொரு பொதுவான ஊடகம் மின்கலங்கள் ஆகும். மின்கலங்கள் பரந்த திறன் அளவுகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகவும், சூழலுக்கு ஏற்றவாறும், செயல்திறன் மிக்கதாகவும், நிறுவ எளிதாகவும், பேணுதலுக்கு எளிதானதும் ஆன மேம்பாடுகளை கொண்டுள்ளன.[2]

மின்ஆற்றல்

தொகு

மின்கலங்கள் உபயோகிப்பதன் மூலம் மின்சார இயக்கிகளை பயன்படுத்த இயலும். அதே நேரத்தில் மின்கலங்கள் குறைந்த ஆற்றல் அடர்த்தி, குறைந்த ஆயுட்காலம், அதிக வெப்பநிலைகளில் குறைந்த செயல்திறன், அதிக மின்கலத் திறனேற்றல் நேரம், அழிப்பதில் சிக்கல்கள் (பொதுவாக மறுசுழற்சி செய்ய இயலும் எனினும்) போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளன. [2] எரிபொருளை போல மின்கலங்கள், வேதி ஆற்றலை சேமிப்பதால் விபத்தின்போது தீக்காயங்களும்,நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தக் கூடும்.[3]

மேலும், மின்கலங்கள் காலம் ஆகஆக, தனது செயல்திறனை இழக்கும். [4] மின்கலத் திறனேற்றல் நேரப் பிரச்சினையை திறனேற்றப்பட்ட மின்கலங்களுடன், உபயோகப் படுத்தப்பட்ட மின்கலங்களை மாற்றுவதன் மூலம் தீர்க்கலாம். [5] ஆனாலும், இது வன்பொருள் செலவை அதிகரிக்கும். மிகப் பெரிய மின்கலங்களுக்கு இம்முறையை செயல்படுத்துவது கடினம். எல்லாவற்றுக்கும் மேலாக மின்கலங்களை மாற்றி உபயோகிப்பதற்கு, அனைத்து மின்கலங்களும் ஒரே மாதிரியானவையாக, தரப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். எரிபொருள் கலன்கள் (Fuel cells) மின்கலங்களை போன்றே, வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. ஆனாலும், அவை அவற்றுக்கே உரிய நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளன.

ஆற்றல்கள் வகைகள்

தொகு

மின் தண்டவாளங்கள், மேல் வடங்கள் ஆகியவை சுரங்கப்பாதைகள், ரயில்பாதைகள், டிராம்கள், மற்றும் தள்ளு பேருந்துகள் போன்றவற்றில் பொதுவான மின் ஆற்றல் மூலங்களாகும்.

சூரிய ஆற்றல் நவீன மேம்பாடு ஆகும். மேலும் பல சூரிய வண்டிகள் நாசாவின் ஹெலிஸ் எனும் சூரிய வானூர்தி உடன் சேர்த்து, வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

அணு ஆற்றல் மிகவும் பிரத்யேக ஆற்றல் சேமிப்பு வடிவமாகும், தற்போதைக்கு பெரும்பாலும் இராணுவம், மற்றும் மிகப்பெரிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிற்கு மட்டும் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அணு ஆற்றலை அணு உலை, அணு மின்கலன், அல்லது அணு குண்டுகளை மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்வதன் மூலம் பெறலாம். அணு ஆற்றலுடன் இயங்கக் கூடிய இரண்டு வானூர்திகள் Tupolev Tu-119 மற்றும் Convair X-6. சோதனை செய்யப்பட்டுள்ளன.

இயந்திர திரிபு ஆற்றலை சேமிக்க உதவும் மற்றொரு வழிமுறையாகும். இம்முறையில் மீள்பட்டை அல்லது உலோக சுருள்வில் ஆனது திரிபடைந்து மீண்டும் பழைய நிலைக்கு விடும்போது ஆற்றலை வெளிப்படுத்துகிறது.உந்துசக்கரம் ஆனது சுழலும் நிறையின் மூலம் ஆற்றலை சேமிக்கிறது. ஒரு ஒளி மற்றும் வேகமான சுழலி (rotor) ஆற்றல் மிக்கது என்பதால் உந்துச் சக்கரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.

காற்று ஆற்றல் ஆனது பாய்மரப் படகு மற்றும் பந்தயப் படகு போன்றவற்றிற்கு முதன்மையான ஆற்றல் மூலம் ஆகும். இது மிகவும் மலிவானது மற்றும் உபயோகிக்க எளிதானது. காற்று ஆற்றலை உபயோகிப்பதில் உள்ள முக்கிய பிரச்சினை, இது வானிலை மற்றும் காற்று வீசும் செயல்திறனை பொறுத்து வேறுபடும். பலூன்கள் கிடைமட்டமாக நகர காற்றையே நம்பியுள்ளன. மேலும் வானூர்திகள் அதி உயர காற்றின் மூலம் ஒரு உந்துதலை பெறலாம்.

அழுத்தப்பட்ட காற்றினால் ஆற்றலை சேமிக்கும் முறை, தற்போது சோதனையில் உள்ளது. இம்முறையில் அழுத்தப்பட்ட காற்று, ஒரு கலனில் சேமிக்கப்பட்டு, பிறகு தேவைப்படும் போது, திறந்துவிடப் படுகிறது. காற்று அழுத்தப்படும் போது வெப்பமடைவதால் பின்னிடைவு இழப்புகள் ஏற்படலாம்.

புவி ஈர்ப்பு நிலை ஆற்றல் gliders, skis, bobsleds மற்றும் பல மலையில் இருந்து கீழிறங்கும் வண்டிகளில் உபயோகப்படுத்தப்படும் ஆற்றல் மூலம் ஆகும். மீளாக்க நிறுத்த (Regenerative braking) முறை ஆனது இயக்க ஆற்றலை எடுக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். இதில் நிறுத்தியுடன் (brakes) இயற்றி அல்லது மற்ற ஆற்றலை வெளிக்கொணரும் முறைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.[6]

மனித திறனானது எளிய ஆற்றல் மூலம், இதற்கு மனிதனை தவிர வேறு எதுவும் தேவைப்படாது. ஆனாலும் மனிதனால் 500 W (0.67 hp) க்கு மேல், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்ய இயலாது ,[7] மனித ஆற்றல் மூலம் இயங்கிய வண்டியின் வேகம் நிலத்தில் 2009ன் படி 133 km/h (83 mph).[8]

சில வண்டிவகைப் பெயர்கள்

தொகு

வண்டிவகைக் காட்சிக்களம்

தொகு

காட்சியகம்

தொகு
  • வண்டியின் நகர்ச்சியை அளக்க பயன்படும் சகடத் தொலைவுமானிகள் (viameter = odometer )

மேற்கோள்கள்

தொகு
  1. Lyndia Carter, “Handcarts,” in Encyclopedia of Latter-day Saint History, 461–63.
  2. 2.0 2.1 "Comparing the Battery with other Power Sources". Battery University. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  3. "Battery Safety". Electropaedia. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  4. "The Lifecycle of an Electric Car Battery". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  5. "Advantages and Disadvantages of EVs". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  6. "How Regenerative Braking Works". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  7. "Bicycle Power - How many Watts can you produce?". Mapawatt. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  8. WHPSC (2009). "Battle Mountain World Human Powered Speed Challenge". பார்க்கப்பட்ட நாள் 25 August 2011. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டி&oldid=3352207" இலிருந்து மீள்விக்கப்பட்டது