ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி
ஒய். எம். சி. ஏ. காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்பது ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி ஆகும். இது அமெரிக்காவின், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஹாரி க்ரோவ் பக் என்பவரால் 1920 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇக்கல்லூரி, சென்னையின் ஒரு முதன்மை வணிக மையப் பகுதியான, ஜார்ஜ் டவுனில் முதலில் அமைந்திருந்தது, பின்னர் சென்னை நகரின் மற்றொரு பகுதியான இராயப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் கல்லூரியானது குடிசைகளில் இயங்கியது.
கல்லூரியின் நந்தனம் வளாகமானது, பல வகுப்பறைகள், உடற்பயிற்சிக்கூடம், ஆய்வகங்கள், கணினி மையம், நூலகம் மற்றும் ஒரு திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றைக் கொண்டதாக 64.5 ஏக்கர் (261,000 மீ²) பரப்பளவிலான இடத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
பயிற்சி வகுப்புகள்
தொகுD.P.Ed, B.P.E, B.P.Ed, B.M.S, M.P.Ed, M.Phill, Ph.D மற்றும் பிற டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகள். பி.எஸ்.எஸ்.எஸ் படிப்பு ஆர்சிஐ, இந்திய புனர்வாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்முயற்சிகள்
தொகு- 1940 ஆம் ஆண்டு இருபாலர் கல்லூரியாக ஆனது.
- இது ஊனமுற்றோருக்கான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான முதல் கல்விக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
- கல்லூரியானது பார்வையற்றவர்களுக்கு பயிற்சியளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது.
- இக்கல்லூரியின் நந்தனம் வளாகத்தில் ஒய். எம். சி. ஏ. கல்லூரி சிறப்புப் பள்ளி என்ற பெயரில் கற்றலில் குறைபாடு, ஆட்டிசம், மூளை வளர்ச்சித் திறன் குறைவு, மல்ட்டிபிள் டிஸார்டர் உள்ளிட்ட மருத்துவச் சிக்கல்களைக் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்காக பகல்நேரக் கவனிப்பு மையம் (day care centre) அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சவாலே சமாளி". தி இந்து. 25 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Website பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்