ஒரிசா மக்கள் காங்கிரசு

ஒரிசா மக்கள் காங்கிரசு (Orissa Jana Congress), பொதுவாக ஜன காங்கிரசு என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ஒடிசாவில் செயல்பட்ட ஒருஅரசியல் கட்சியாகும். 1966ஆம் ஆண்டு ஹரேகிருஷ்ணா மகதாப் (முன்னாள் ஒரிசா முதல்வர்) இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகியபோது ஒரிசா மக்கள் காங்கிரசு உருவாக்கப்பட்டது. 1967 தேர்தலுக்குப் பிறகு, இக்கட்சி சுதந்திராக் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது. இந்த கூட்டணி அரசு 1967 முதல் 1969 வரை நீடித்தது. 1971 மற்றும் 1974 மாநில தேர்தல்களில் மக்கள் காங்கிரசு படுதோல்வி அடைந்தது. மேலும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 1977ல் ஒடிசா மக்கள் காங்கிரசு ஜனதா கட்சியுடன் இணைந்தது.[1]

ஒரிசா மக்கள் காங்கிரசு Orissa Jana Congress
சுருக்கக்குறிOJC
தலைவர்ஹரேகிருஷ்ணா மகதாப்
தொடக்கம்1966; 58 ஆண்டுகளுக்கு முன்னர் (1966)
கலைப்பு1977; 47 ஆண்டுகளுக்கு முன்னர் (1977)
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
இணைந்ததுஜனதா கட்சி
இ.தே.ஆ நிலைமுன்னர்
இந்தியா அரசியல்

மேலும் பார்க்கவும் தொகு

  • இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Regional Political Parties and Coalition Government of Odisha - Ignited Minds Journals" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரிசா_மக்கள்_காங்கிரசு&oldid=3800371" இலிருந்து மீள்விக்கப்பட்டது