ஒருங்குறியக் கூட்டமைப்பு

ஒருங்குறியக் கூட்டமைப்பு(ஆங்கிலம்:Unicode Consortium (Unicode Inc.) என்பது ஒருங்குறியத் தரத்தைப் பேணுவதற்காக, உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். பல்வகை வேறுபாடுகள் உடைய மொழிகளையும், ஒரே சூழலில் கையாளும் திறனை வளர்ப்பதற்காக, இவ்வமைப்பு செயல்படுகிறது.

நோக்கம் தொகு

இவ்வமைப்பு தோன்றுவதற்கு முன்பு, ஒவ்வொரு மொழிக்கும், ஒரு குறிப்பிட்ட கணினி எழுத்து முறைமை என பல்வேறு எழுத்து முறைமைகள் இருந்தன. அவை அனைத்தினையும் தன்னுள் அடக்கி, பல்மொழிச்சூழலை வளர்க்கவே, ஒருங்குறி(Unicode Transformation Format (UTF)) ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒருங்கிணைத்தலே,இக்கூட்டமைப்பின் இலக்கும், நோக்கமும் ஆகும்.

சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும் என்ற அடிப்படையில், ஒரு கணினியின் மென்மப் பயன்பாடு வெற்றியடைய, ஒருங்குறியக் கூட்டமைப்பின் செயற்பாடே, மிகமிக முதன்மைத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.[1]

ஒருங்குறியத் தர முறைமையை வளர்க்க, இவ்வமைப்பு அனைத்து உலக தர அமைப்புகளுடன் (en:Standards organization) இணைந்து பணியாற்றுகிறது. ISO/IEC JTC1, W3C, IETF, ECMA போன்ற தர அமைப்புகளுடன், இக்கூட்டமைப்பு இணைந்து பணியாற்றுவது, குறிப்பிடத்தக்கது.

நூல்கள் தொகு

  1. The Unicode Standard, Version 5.0 (5th edition ). Addison-Wesley. October 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-321-48091-0. 
    en:Addison-Wesley என்ற அமெரிக்கப் பதிப்பகம், கணினி நூல்களுக்காகப் பெயர்பெற்றது.Safari Books Online என்ற எண்ணிம நூலகத்திற்கும் தனது நூல்களை இப்பதிப்பகம் வழங்கியுள்ளது.
  2. The Unicode Standard, Version 4.0. Addison-Wesley. August 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-321-18578-5. https://archive.org/details/unicodestandard0000unse_p4z3. பார்த்த நாள்: 2006-08-22. 

இதையும் காணவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "How will you type the new Rupee symbol?". IBNLive. 15 July 2010 இம் மூலத்தில் இருந்து 2010-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100718220112/http://ibnlive.in.com/news/how-will-you-type-the-new-rupee-symbol/126739-11.html. 

புற இணைப்புகள் தொகு