ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்

லெனின் எம்.சிவம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் ஒன்றாகும்.[1] 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 14 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.[2][3]

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட விள்ம்பரம்
இயக்கம்லெனின் எம். சிவம்
தயாரிப்புவஷ்னு முரளி
கதைலெனின் எம். சிவம்
திரைக்கதைலெனின் எம். சிவம்
இசைபிரவீண் மணி
நடிப்புசுதன் மகாலிங்கம்
ஒளிப்பதிவுசுரேஸ் ரோகின்
கலையகம்Eye Catch Mulitmedia Inc.
விநியோகம்Eye Catch Mulitmedia Inc.
வெளியீடுசெப்டம்பர் 28, 2013 (கனடா)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுகனடா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியுள்ளார்.

பங்கு பற்றிய திரைப்பட விழாக்கள்

  • சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா (SIFF) in June 2013[4]
  • மொன்ரியல் உலக திரைப்பட விழா (MWFF) in Aug 2013[5]
  • லூஈவில் பன்னாட்டுத் திரைப்பட விழா (LIFF) in Oct 2013
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழா (CIFF) in Oct 2013
  • ஹமில்டன் திரைப்பட விழா (HFF) in Nov 2013
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழா (NTFF) in Apr 2014
  • சென்னை பெண்களுக்கான உலக திரைப்பட விழா (CWIFF) in May 2014
  • கொழும்பு உலக திரைப்பட விழா (IFFColombo) in Sept 2014

விருதுகள்

  • சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு
  • ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேர்வு
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது ( Sapphire Award for Best Feature Film)
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது (Sapphire Award for Best Director)
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது (Emerald Award for Best Actor Jon Berrie)
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது (Green Award for Best Actor Kandasamy Gangatharan)
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது

நடிகர்கள்

  • ஜான் பெரி
  • மதிவாசன் சீனிவாசகம்
  • கந்தசாமி கங்காதரன்
  • சேகர் தம்பிராசா
  • பாஸ்கர் மனோகரன்
  • தேனுகா கந்தறாயா
  • பவானி சோமசுந்தரம்
  • செல்வஜோதி ரவீந்திரன்
  • ஷெளி ஆந்தனி
  • சுதன் மகாலிங்கம்
  • கோபி திரு
  • பார்த்தி புவன்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்