ஒரு மோதல் ஒரு காதல் (திரைப்படம்)
ஒரு மோதல் ஒரு காதல் 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை கீர்த்தி குமார் இயக்கியுள்ளார்[2]. விவேக் ராஜகோபால், மேகா பர்மன், பிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் போன்றோர் நடித்துள்ளனர்.
ஒரு மோதல் ஒரு காதல் | |
---|---|
ஒரு மோதல் ஒரு காதல் | |
இயக்கம் | கீர்த்தி குமார் |
இசை | கே.ஆர். கவின் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | யுகா |
கலையகம் | கந்தன் கியர்அப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்[1] |
வெளியீடு | மார்ச்சு, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுஇயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார் விவேக். ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார், அவரும் இவரது காதலை ஏற்றுக்கொள்கிறார்.
அந்த பெண் இவரிடம் உடனடியாகத் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார். விவேக் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் செல்கிறார். தனது காதலை வீட்டில் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.
இருந்தாலும், தனது காதலியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கும் விவேக் காதலியை யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அதற்கு ஏற்பாடு செய்கிறார்.
பதிவு திருமணத்தன்று காதலி வராததால் அவளுடைய வீட்டுக்குத் தன் நண்பர்களுடன் செல்கிறார். அங்கு காதலியின் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். காதலி திருமணத்துக்கு மறுத்துவிடுகிறார். அங்கு நடக்கும் மோதலில் காதலியின் அண்ணன் தாக்கப்பட விவேக் சிறை செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து விவேக்கின் அண்ணன் அவரை வெளிக்கொண்டு வருகிறார்.
தன்னைக் காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் விவேக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. அங்கு செல்கிறான். அங்கு படிக்க வரும் மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறான். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் மேகா, விவேக்கை டெல்லிக்கு வரவழைத்துத் தனது குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்துகிறாள்.
விவேக்கை அவளது குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள். விவேக்கினுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள். சம்மதம் வாங்க ஊருக்குத் திரும்பி வருகிறார் விவேக். முதலில் விவேக்கின் திருமணத்துக்கு மறுத்த அவரின் குடும்பத்தார் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார்களா, இல்லையா என்பதே மீதிக்கதை.