ஒரூஉ வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

ஒரூஉ வண்ணம் என்பது செய்யுளின் தொடைவகையில் நிகழும் நடை. எதுகை, மோனை, இயைபு, முரண் என்னும் எந்தத் இல்லாமல் செந்தொடையாகி நடப்பது. ஒருவுதல் என்பது விலகுதல்.

தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே
யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ
சொல்லாய் வாழி தோழி வரைய
முள்ளில் பொதுளிய பல்குரல் நெடுவெதிர்
பொங்குவரல் இளமழை துவைப்ப
மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே. [1]

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரூஉ_வண்ணம்&oldid=1114574" இலிருந்து மீள்விக்கப்பட்டது