ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம், (ஒ.ப.ஒ.ஓ) (One Rank, One Pension) என்பது இந்திய இராணுவத்தில்  சேவை புரிந்து ஓய்வு பெறுபவர்களது ஓய்வூதியத்தின் அடிப்படையாக, அவர்கள் ஓய்வு பெற்ற தேதியைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களது பதவி, அப்பதவியில் அவர்கள் சேவை செய்த கால அளவு இவற்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கொள்கையாகும். 1973 வரை இக்கொள்கையைப் பின்பற்றியே இந்திய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.[1]:பத்தி 10.4 மற்றும் 11.2

1973-இல் அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு மூன்றாம் ஊதியக்குழுவின் கருத்துபடி ஒ.ப.ஒ.ஓ கொள்கையைஒருதலையாக முடிவுக்குக் கொண்டுவந்தது.[2] இம்முடிவு படைவீரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது; அப்போதிலிருந்து பல முன்னாள் படை வீரர்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்குக் காரணமாக இருந்து வருகிறது.[1]:பத்தி 2 மற்றும் 10.2

விளக்கம் தொகு

கோஷியாரி குழு வழங்கிய விளக்கம் தொகு

2011-இல் அமைக்கப்பட்ட கோஷியாரி குழு என்றழைக்கப்படும்  மாநிலங்களவையின் விண்ணப்பக் குழு பல தரவுகளையும், வாய்மொழி சாட்சியங்களையும் கருத்தில் கொண்டு 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' (ஒ.ப.ஒ.ஓ) என்பதன் விளக்கக் கருத்தை பின்வருமாறு வழங்கியது:[1]

ஒ.ப.ஒ.ஓ "குறிப்பிடுவதாவது ஒரு பதவியில், ஒரே கால அளவு பணி புரிந்து ஓய்வு பெறும் இராணுவப் படை ஊழியர் அனைவருக்கும், அவர்களின் ஓய்வுத் தேதியைக் கருத்தில் கொள்ளாமல், சீரான ஓய்வூதியமும், வருங்காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய உயர்வுகளும் முன்னாள் ஓய்வூதியதாரர்களுக்கும் தானாகப் போய்ச் சேரவேண்டும்." [1]:பத்தி 3 மற்றும் 6  இக்கருத்து விளக்கம் "தற்கால மற்றும் கடந்தகால ஓய்வூதியதாரரிடையே நிலவும் ஓய்வூதிய இடைவெளியைக் களைவதும், எதிர்கால ஊதிய உயர்வுகளை தன்னிச்சையாக கடந்தகால ஓய்வூதியதாரருக்கும் கிடைக்குமாறு செய்யவும் வேண்டும். படைகளுள் பணி சமநிலை என்பது, பதவி மற்றும் பணிக்காலம் என்ற இரு பகுதிகளை உள்ளடக்கியது. பதவி அல்லது பணி படிநிலை என்பது இந்தியக் குடியரசுத் தலைவரின் நேரடி ஆணையில் வழங்கப்படுவதாலும், சேவைப் பண்பாட்டு அம்சங்களான ஆணை, கட்டுப்பாடு மற்றும் கடமை என்பவற்றைக் குறிப்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிநிலைப் பெயர்களை அவ்வப்பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே படிநிலையில் ஒரே பணிக்கால அளவு உடைய இரு படை பணியாளர்கள், வெவ்வேறு நாட்களில்/தேதிகளில் ஓய்வு பெற்ற போதும் ஒரே அளவு ஓய்வூதியமும், எதிர்கால ஓய்வூதிய உயர்வுகளையும் தானாகக் கிடைக்கப்பெறச் செய்ய வேண்டும்" என்ற கருத்துக்களை உள்ளடக்கியது.[1]:பத்தி 3

 
'ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய' முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கர்னல் புஷ்பேந்தர் சிங் மற்றும் ஹவில்தார் மேஜர் சிங்

கோஷியாரி குழு வழங்கிய ஒ.ப.ஒ.ஓ விளக்கத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஏற்றுக்கொண்டது[3]; பாரளுமன்றமும், முன்னாள் இராணுவ சேவையாளர்களும் அவர்களது சங்கங்களும் இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்டன. அன்றுதொட்டு இவ்விளக்கமே முன்னாள் இராணுவ சேவையாளகள் வேண்டும் ஒ.ப.ஒ.ஓ-வின் அடிப்படையாக விளங்குகிறது. இவ்விளக்கம் முன்னாள் இராணுவச் சேவையாளர்கள் வடித்த ஒ.ப.ஒ.ஓ-வின் விளக்கத்தோடு ஒத்துப்போகிறது. அதன்படி, ஒ.ப.ஒ.ஓ என்பது  “ஒரு பதவியில் ஒரே கால அளவு சேவை புரிந்த ஒவ்வொரு படைவீரருக்கும், அவர்கள் ஓய்வுபெற்ற தேதியைக் கருத்தில் கொள்ளாது, சமமான ஓய்வூதியம் வழங்குவதைக் குறிப்பதாகும்.” [4]:ப 1

கோரிக்கை ஏற்பு தொகு

1973இல் 3வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்கும் முறையை ரத்து செய்தார். கடந்த 43 ஆண்டுகளாக முன்னாள் படைவீரர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 5 செப்டம்பர் 2015இல் முன்னாள் படைவீரர்களுக்கு மீண்டும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை ஏற்பதாக இந்திய அரசு அறிவித்தது.[5] [6].இதற்கான நிதிப் பலனை 2013ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டும், 1 சூலை 2014ஆம் ஆண்டு முதல் முன்தேதியிட்டும் வழங்கப்படும் என இந்திய அரசு முடிவு செய்துள்ளது.[7]

சான்றாதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Koshiyari, BJP, MP, Bhagat Singh (16 December 2011).
  2. Koshiyari, Bhagat Singh, BJP, MP (16 December 2011). "Hundred and forty second report: Petition praying for the Grant of One Rank One Pension to members of the Armed Forces Personnel, (19 December, 2011)" (PDF). Rajya Sabha, Secretariat. Archived from the original (PDF) on 21 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Press Trust of India (27 February 2014). "OROP for ex-servicemen to be implemented from April 1". Zee News. http://zeenews.india.com/news/nation/orop-for-ex-servicemen-to-be-implemented-from-april-1_914653.html. பார்த்த நாள்: 25 June 2015. 
  4. Singh, Surjit, Major General, (Retd) (2008). "One-Rank One-Pension: CLAWS ISSUE BRIEF No. 4, 2008" (PDF). Delhi Cantonment: CENTRE FOR LAND WARFARE STUDIES (CLAWS). Archived from the original (PDF) on 20 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. Govt. announces OROP, but veterans decide to continue stir
  6. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி
  7. "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' அமலாகிறது

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_பதவி,_ஒரே_ஓய்வூதியம்&oldid=3778833" இலிருந்து மீள்விக்கப்பட்டது