ஒற்றி வைத்தல்

ஒற்றி வைத்தல் என்பது நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெறும் முறை ஆகும் பணம் கிடைத்ததும் அதைத் தந்து மீட்க வேண்டும். ‘ஒற்றியூர்' என்ற இடத்துச் சிவனைப் புகழும் பதிகத்தில் இவ்வழக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஒற்றி வைத்தலை இந்நாளில் அடகு வைப்பதென்பர். அது பொருளாக எழுதப் படும் சாசனத்தை அடைமானம் என்பர். முன்னை நாளில் அடைமானத்தை ஒற்றிக் கலம் என்றனர். ஒற்றி வைத்தல், மக்களிடையே தாழ்வுடைச் செயலாகக் கருதப்பட்டது. [1] விளைநிலத்தையோ வீட்டையோ பணம் பெற்றுக் கொண்டு வேறு ஒருவரின் பயன்பாட்டுக்கு விடுவதை வழக்கில் ஒத்திக்கு விடுதல் என்றும் சொல்லுவர்.


     என்னா ருயிர்க்குப் பெருந்துணையாம்
          எங்கள் பெருமா னீரிருக்கு
     நன்னாடு ஒற்றி யன்றோதா
          னவில் வேண்டு மென்றுரைத்தேன்
     முன்னா ளொற்றி யெனினுமது
          மொழித லழகோ தாழ்தலுயர்
     விந்நா னிலத்துண் டென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.[2]

ஒற்றியும் தேசவழமையும்தொகு

யாழ்ப்பாணத்து மரபுவழிச் சட்டமான தேசவழமையில் ஒற்றி குறித்து விபரமாக எடுத்தாளப்பட்டுள்ளது. இவ்வகை ஒற்றி தேசவழமைக்குத் தனித்துவமான ஒன்று.[3] ஒற்றி வைத்தல், ஒற்றியை மீள்வதற்கான முறைகள், அதற்கான கட்டுப்பாடுகள், ஒற்றி கொள்பவனுக்கு உரிய கடமைகள், ஒற்றி வைப்பதற்கு உரிய சொத்துக்கள் போன்றவை குறித்த விபரங்களைத் தேசவழமை தருகின்றது.[4] யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்தாவது வழக்கில் இருந்துவரும் இந்த ஒற்றி குறித்த வழமைகள், போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும் வழக்கில் இருந்து வந்தது. பிற்காலத்தில் தேசவழமையில் உள்ள இவ்விதிகளின் பயன்பாடு இல்லாமல் ஆக்கப்பட்டுப் பிற வழக்கில் உள்ள குடியுரிமைச் சட்டங்களின் அடிப்படையிலேயே ஒற்றி வைத்தலும், ஒற்றி கொள்ளலும் நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.tamilvu.org/slet/l5F31/l5F31pd1.jsp?bookid=128&sec=4&pno=1574
  2. திருவருட்பா
    இரண்டாம் திருமுறை பாடல் எண்: 1898.
  3. Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. ப. 206.
  4. பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 112-115.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றி_வைத்தல்&oldid=1441859" இருந்து மீள்விக்கப்பட்டது